பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 இ. புலவர் கா. கோவிந்தன் வம்ப வடுகர் பைந்தலை சவட்டிக் கொன்ற யானை." "கோடுநரல் பெளவம் கலங்க வேல் இட்டு உடை திரைப் பரப்பில் படுகடல் ஒட்டிய வெல் புகழ்க் குட்டுவன்.” "ஆரியர் அலறத் தாக்கிப் பேரிசைத் தொன்று முதிர் வடவரை வணங்குவில் பொறித்து வெஞ்சின வேந்தரைப் பிணித்தோன்." ‘ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசுபட அமர் உழக்கி முரசு கொண்டு களம் வேட்ட அடுதிறல் உயர் புகழ் வேந்தே" எனப் புலவர்கள் ஒருபால் பாராட்டிப் பெருமை செய்துள்ளமை அறிக. பாக்கள் பல பாடிப் பாராட்டு முகத்தால், அரசர்களின் ஆற்றல் மறவர்களின் வீர உணர்வுக்கு உரம் ஊட்ட எண்ணிய புலவர்கள், தங்கள் பாராட்டு நெறியில் புதுப் புது முறைகளைக் கையாண்டார்கள். நாட்டவர்க்கு வேண்டும் வாழிடங்களையும், அவர்க்கு வேண்டும் உணவுப் பொருள்களை ஒன்று பத்தாக உளவாகித் தரவல்ல விளை நிலங்களையும் வேண்டுமளவு குறைவறப் பெற்றுத் தருவதே வேந்தர்களின் தலையாய கடமையாம் என்பது கொண்டு, காடு கொன்று நாடு காணும் நற்பணியில் நாடாள்வார் ஒவ்வொருவரும் ஊக்கங் காட்டி வரும் நிலையில், பேருழைப்பும் பெருந்துயரும் மேற்கொண்டு காடுகளை அழித்துப் புது நாடு காணுவதிலும், பண்டே செப்பம் செய்யப் பெற்றுச், சிறந்த பல வளம் நல்கும்