பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 இ. புலவர் கா, கோவிந்தன் “நின் கடல் பிறந்த ஞாயிறு, பெயர்த்தும் நின் வெண் தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் யாணர் வைப்பின் நன்நாட்டுப் பொருந.” -புறம்: 2. பல்யானைச் செல்கெழு குட்டுவனைப் பாடிய பாலைக் கெளதமனார் முதலாம் புலவர்கள், மணி முடிசூடி அரியணை அமர்ந்த நாள் தொடங்கி, ஆண்டு தோறும் நிகழும் முடி புனைவிழாவாம் மண்ணு மங்கல நாளன்று மேற்குக் கடல் கிழக்குக் கடல் ஆகிய இரு கடல்களுக்கும், தன் களிற்று யானைக் கூட்டங்களைப் போக்கி, அவை பொற்கலங்களில் முகந்து கொணர்ந்த அவ்விரு கடல் நீரிலும் ஒருசேரப் புனலாடிப் பெருமை கொண்டான் பல்யானைச் செல்கெழு குட்டுவன் எனப் பாராட்டு முகத்தான், அவன் மேற்குக் கடற்கரை தொடங்கிக் கிழக்குக் கடற்கரை வரையும் பரவிய ஒரு பெரு நாடாண்டவன் என, அவன் எல்லைப் பெருமையினையே எடுத்துக் கூறிப் பாராட்டியுள்ளார்கள். "கருங்களிற்று யானைப் புணர் நிரை நீட்டி - இருகடல் நீரும் ஒரு பகல் ஆடி." -பதிற்று பதிகம் 3. "இருகடல் நீரும் ஆடினோன்." -சிலம்பு 28:146. அரசுகளெல்லாம் தன் அடி பணிதல் வேண்டும்; இவ்வுலகம் ஊராள்வார் பலர்க்கும் பொது!’ எனும் உரை பொய்யாக, அவ்வுலகம் தன் ஒருவன் உடைமையாதல் வேண்டும் என எண்ணிய வேந்தன், அந்நிலையைக் களம் புகுந்து போராடிப் பெறுவது தன் பெருமைக்கும் பொருந்தாது. தன் ஆற்றல் கண்டு அஞ்சி, அரசரெல்லாம் தாமாகவே வந்து தன் வாள் பணிதல் வேண்டும் என்றும் எண்ணினான். "படைக்கலங்கள் முனை மழுங்கப் பெரும் போர் செய்து வெற்றி காண்பது எல்லோர்க்குமே எளிது.