பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 Gumri GM6Igf5uqúd Gumri அச்சமும் அகப்புறப் பகையற்று நாடு காவல் நன்கு நடை பெறுதல் வேண்டும் என்ற நல் உள்ளத்தோடு, புலவர்கள் வழங்கிய பாராட்டு, அரசர்களுக்குப் போர் வெறியூட்டுவ தாகி விட்டது. பெருகும் தன் நாட்டு மக்கட் டொகைக்கு வாழ்விடம் காணுதல் காரணமாகப் பிறர் மண் கொள்ளுதல், பகைவர் கைப்படாவாறு தம் மண் காத்தல் என்ற இன்றியமையாக் காரணங்களுக்காக மட்டு மல்லாமல், மன்னர்கள் தம்மனம் விரும்பும் போதெல்லாம் போரிடத் தலைப்பட்டார்கள். தம் மனம் விரும்பும் நாட்டின் மீதெல்லாம் போர் தொடுக்கத் தலைப் பட்டார்கள். பகைநாட்டுப் படையை வெற்றி கொள்வ தோடு அமையாது, அப்பகைப் படை வீரரைப் பல கொடுமைக்கு உள்ளாக்கினர்; ஏதும் அறியாப் பகை மக்களைப் பெரிதும் கொடுமைப்படுத்தினார்கள். தமிழக வரலாற்றை, அதன் தொடக்க கால நிலையி லிருந்து ஆராய்ந்து காண்பார்க்கு, தமிழகம் தன்னேரில்லா அரசு ஒச்சித் தழைத்திருந்த காலம், சேர, சோழ, பாண்டியர் என்ற முடியுடை மூவேந்தர் அரசோச்சிய காலமாம் என்ற பாராட்டினுக்கு இடையே, அத்தமிழகம் அத்தகு பெரு நிலையிலிருந்து தாழ்ந்தமைக்கும் அம்மூவேந்தர்களே