பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 இ. புலவர் கா. கோவிந்தன் காரணமாம் என்ற பழிதரு உரையினையும் கூட்டி எழுத வேண்டிய நிலையிலேயே அன்றைய அரசியல் சூழ்நிலை அமைந்திருந்தது என்பது தெற்றெனப் புலனாம். r தமிழரசர் மூவரும் ஒற்றுமை கொண்டு ஊராண் டவர் அல்லர்; அவர்கள் ஒவ்வொருவரும், பிறரை அடக்கி ஆள வேண்டும் என்ற எண்ணமுடையவராகவே இருந் தார்கள். ஒரு காலத்தில், அம்மூவேந்தர் குடிகளுள் ஒரு குடியில் ஆற்றல் மிக்க ஒருத்தன் தோன்றிவிட்டால், அவன் பிற அரசுகளை யெல்லாம் பணிய வைத்த ஒப்பற்ற பேரரசனாய் வாழ வேண்டும் என்று எண்ணுவதும், அதைப் போலவே, அவன் ஆற்றலும் செல்வமும் கண்டு மனம் பொறாத ஏனைய அரசர்கள் அனைவரும் ஒன்று கூடி அவனை அழிக்க முனைவதும், அக்கால அரசியல் ஒழுக்கமாகத் திகழ்ந்தன; ஒரு குடியில் பிறந்தவர், தம் குடி ஒழிந்த ஏனைய குடிகளில் பிறந்தாரோடு பகைத்து வாழ்தலோடு மட்டும் நின்றாரல்லர். ஒரு குடியில் பிறந்தவர்களே, ஒருவரேடொருவர் பகைத்துப் போரிட்டு அழித்தார்கள். அது மட்டுமன்று, தந்தை, மகனை எதிர்ப்பன்; மகன் தந்தை மீதே போரிட்டு எழுவான். இதுவே, பண்டைத் தமிழகத்தின் பாராட்டுக்குரிய அரசியல் சூழ்நிலை; தமிழரசர்களின் போர் வெறி, அத்துணை ஆற்றல் கொண்டு தலைதுாக்கி ஆடிற்று. மூவேந்தர்களுள் முதற்கண் வைத்து எண்ணப் படுவோராகிய சேரர் குலத்தில் வந்த இளஞ்சேரல் பெரும் பொறை என்பான், பெரும் படையோடு சென்று, சோழனும், பாண்டியனும், மற்றும் அவர்க்குத் துணை நிற்கும் வேறு சில குறுநிலத் தலைவர்களும் காத்து நின்ற விக்கிமலையையும், அதற்குக் காவலாய் அமைந்திருந்த,