பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 இ. புலவர் கா. கோவிந்தன் கொண்டு விட்ட குறையை நிறைவாக்குவான் வேண்டிச் சேர, சோழ மன்னர்களை வென்று, அவர்கள் நாட்டைத் தன் நாட்டோடு இணைத்துக் கொண்ட வரலாற்றினைச் சிலப்பதிகாரமும், கலித்தொகையும் சிறப்புறக் கூறுகின்றன. "மலி திரை ஊர்ந்து தண்மண் கடல் வெளவலின், மெலிவின்றி மேற்சென்று, மேவார் நாடு இடம்படப் புலியொடு வில் நீக்கிப் புதழ் பொறித்த கிளர்கெண்டை வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன்.” --கலி:140 பொதிகைமலைச் சந்தனத்தாலும் கொற்கைத் துறை முத்தாலும் வளங்கொழிக்கும் பாண்டியர் அரியணையில், நெடுஞ்செழியன் என்ற நனிமிகு இளையோன் ஒருவன் அமரக் கண்டதும், சேரனும், சோழனும், செழியன் வளர்ந்தால் நம்மை வாழவிடான்; இளையனாகயிருக்கும் போதே அவனை அழித்து விடுதல் நலம்; அவனை அழித்தால் நாம் அடையலாகும் செல்வமும் சிறப்பும் அளவிறந்தன; நாமோ நாற்படையால் பெருமை பெற்றவர்; நமக்கிலா அப்பெரு வாழ்வு அவனுக்கு வாய்ப்பதா என்ற காழ்ப்புணர்வால், ஒன்று கூடி, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் என்ற குறுநில மன்னர்களோடு கூடிய ஒரு கூட்டணியும் அமைத்துக் கொண்டு, பாண்டியர் தலைநகரை வளைத்துக் கொண்ட வரலாற்றினையும், அவர் எண்ணத்தில் மண் விழும் வகையில் செழியனை வெற்றி கொள்வதற்கு மாறாக, அவனால், தலையாலங் கானப் போரில் தம் தருக்கிழந்த வரலாற்றினையும் அகமும், புறமும் அழகாக எடுத்துக் கூறுகின்றன.