பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 235 "கொய்சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் ஆலங்கானத்து அகன்தலை சிவப்பச் சேரல், செம்பியன், சினங்கெழு திதியன், போல்வல் யானைப் பொலம்பூண் எழினி, நார் அரி நறவின் எருமையூரன் தேம்கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன் என்று எழுவர் நல்வலம் அடங்க, பகல் முரசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக் கொன்று களம் வேட்ட ஞான்றை. -அகம் 36. கோவூர்க் கிழார் என்ற புலவர் கோமகன் கூறிய பொன்னுரைகளையும் பொருட்படுத்தாமல், ஆவூர்க் கோட்டை, உறையூர்க் கோட்டை காரணமாகப் போரிட்டு அலைந்த நலங்கிள்ளியும், நெடுங்கிள்ளியும் ஒரு தாயத்தவர்; ஒரு குடியில் பிறந்தவராவர்; தான் பெற்ற மக்கள், தன்மீதே போர் தொடுத்து வருமளவு தகாதவர் ஆகிவிட்டனரே என்ற மன நோயால், அம்மக்கள் மீதே போர் தொடுத்து எழுந்து, அந்நிலையில் தன் உடன் இருந்த அரும்பெரும் புலவர்களாம் தன் நண்பர்கள் கூறிய அறவுரை கேட்டு, அமரைக் கைவிட்டு, அந்நிகழ்ச்சி தன் உள்ளத்தில் ஆழப் பண்ணிய புண்ணால் வருந்தி வடக்கிருந்து உயிர் துறந்த கோப்பெருஞ்சோழன் வரலாறு, மக்கள் தந்தை மீது போர் தொடுப்பதற்கும், தந்தை மக்கள் மீது போர் தொடுப்ப தற்கும் தலையாய சான்றாகுமல்லவோ? ஒரு நாட்டின் மீது போர் தொடுக்க விரும்பிய ஒர் அரசன், அவ்வாறு போர் தொடுத்துப் போவதன்முன், தான் எந்த நாட்டின் மீது போர் தொடுக்க விருக்கின்றனனோ, அந்நாட்டவர் அறிந்து கொள்ளும்