பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 287 கோவூர்க் கிழார் தலையீட்டினால் அல்லவோ நிகழாமல் நின்றது? உறையூரைத் தலைநகராகக் கொண்ட சோணாட்டு அரியணை மீது கொண்டுவிட்ட அளவிறந்த காதல் உணர்வால், அறிவிழந்து போய், அவ்வரியணையை அடையத் தன்னைப்போலவே ஆராக்காதல் கொண்டு விட்ட நலங் கிள்ளிபால் நெடும் பகையை வளர்த்துக் கொண்ட காரணத்தால், அவன் அரசவை அடைந்து பாடிப் பரிசில் பெற்றுப் பின்னர்த் தன் அரசவை அணுகிய புலவன் இளந்தத்தனை, நலங்கிள்ளியின் ஒற்றனாகப் பிறழ உணர்ந்து, பொருள் அளித்துப் போற்ற வேண்டுவதை விடுத்துக் கொல்ல முனைந்த நெடுங்கிள்ளியின் செயல் நினைக்கும் நெஞ்சையும் சுடும் கொடுமையுடையதன்றோ? பத்தினிப் பெண்டிர்க்குக் கோயில் அமைத்து வழிபடும் வழக்கத்திற்குத், தமிழகத்தில் கால்கோள் விழாக் கண்டவிழுமியோனாகிய செங்குட்டுவன், அத்தகு போர் வெறிக்கு அடிமைப்பட்டுப் போய்விட்ட காரணத்தால், மோகூர்ப் பழையனை வெற்றிகொண்டு கொன்றுவிட்ட பின்னர், பற்றுக் கோடற்றுப் போன அவன் உரிமை மகளிரைப் பாதுகாக்க வேண்டும் என்றகடமையுணர்வைக் கைவிட்டதோடு அமையாது, போரில் வெட்டி வீழ்த்திய பழையன் காவல் மரமாம் வேம்பினைக் கட்டி யீர்த்துச் செல்வதற்கு வேண்டும் கயிறு திரிப்பதற்காகவே, அம் மகளிரின் மயிரைக் கழித்துக் கொடுமைப்படுத்தினான் என்றால், அப்போர் வெறியின் கொடுமையை என்னெனப் புகல்வது? - அரசர்களின் போர்வெறி, இவ்வாறு, தனிப்பட்ட ஒரு சிலரைக் கொல்வதும், கொடுமை புரிவதும் ஆகிய அந்த