288 இ. புலவர் கா. கோவிந்தன் அளவோடு அடங்கி விடவில்லை; பகையரசனின் நாடு நகரங்களை அறவே அழித்து, அவ்வழிவு கண்டு அகங்களிக்குமளவு வளர்ந்து பெருக நின்றது. புறத்தே, பகைவர் புகுவதற்கும் அஞ்சும் காவற் காட்டையும், அகத்தே, உழவர்கள் ஏர்பல கொண்டு உழுது தொழி லாற்றியதன் பயனாய்ச் செந்நெல்லும் கரும்பும் செழித்து வளர்ந்து கண்கொள்ளாக் காட்சி நலம் நல்கும் நன் செய்களையும், கழுநீர் முதலாம் மலர்கள் மலர்ந்து கவின் பெறத் தோன்றும் பொய்கைகளையும் நிரைநிரையாகச் சென்று நிறைபுல் மேய்ந்து பெரும் பால் நல்கும் பசுக் கூட்டங்களையும், ஊர் மகளிர் ஒன்று கூடிக் குரவையும் துணங்கையும் ஆடிமகிழும் மன்றங்களையும், ஆன்றோரும் சான்றோரும் அமர்ந்து, நகரில் அறனல்லன நிகழா வண்ணம் காத்து நிற்கும் அறங்கூர் அவைகளையும், தங்கள் வாழிடங்களில் வாழ வாய்ப்பற்றுப் போன காரணத்தால், தம் நாடு வந்து புகும் வேற்று நாட்டவரை வரவேற்று ஓம்பித் தாமும் வாழ்வாங்கு வாழும் செழுங்குடிச் செல்வர் களையும், தங்கள் மனை நோக்கி வரும் விருந்தினர்களை அகமும் முகமும் மலர வரவேற்று விருந்தோம்பும் உயர்குடி மகளிரையும், நெல் முதலாம் ஒன்பான் வகை உணவுப் பொருள்களைக் குவித்து வைத்திருக்கும் குதிர்கள் குன்றுகள் போல் ஆங்காங்கே காட்சி அளிக்கக் கட்டி வைத்திருக்கும் எழுநிலை மாடங்களையும், பல்வேறு நறுமணங்களை வாரி அளிக்கும் நாளங்காடிகளையும் கொண்டு, நவநாகரிகத்தின் இருப்பிடமாய்க் காட்சி அளித்த ஒரு பெருநகரம், தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனின் நாற்படையால் தாக்குண்ட காரணத்தால், காவற் காடுகள் அழிவுறவும், வயல்களில்
பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/291
தோற்றம்