பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர் ஒழிப்பு நாடு காவலுக்கு, ஆண்மையும் ஆற்றலும் இன்றி யமையாதன என்பதால், மன்னர்களின் ஆண்மையை, மாவீரர்களின் ஆற்றலைத் தம் பாவிடை வைத்துப் பாராட்டிய புலவர்கள், அப்பாராட்டு, அவர்களின் போர் உணர்வைப் போர் வெறியாக மாற்றவும், அறவழிப்போர் புரிந்த அவர்களை மறவழிப் போக்கவுமே துணை புரிந்தது என்பதைக் கண்டு கொண்ட பின்னர், அவை போலும் பாராட்டுரைகளைப் பெருமளவு கைவிட்டு, அவர்கள் உள்ளத்திலிருந்து, போர் உணர்வு பையப் பையக் குறையும் வகையில் அறிவுரை கூறத் தொடங்கினார்கள். மன்னர்களின் இயல்பு உணர்ந்தவர்கள் புலவர்கள், போர் வெறியால் காழ்ப்பேறிவிட்ட அவர்கள் உள்ளத்தில் அறவுணர்வைக் குடியேற்றுவது அத்துணை எளிது அன்று என்பதை அவர்கள் அறிவார்கள்; அதனால், அறங்காட்டி, அரசர்களின் மறவுணர்வை மங்க வைக்க முயலாது, அதற்கும் மறத்தின் துணையையே நாடினார்கள்; மன்னர்கள், தங்கள் மறவுணர்வு பழி பெறவோ, குடிப்புகழ் குன்றவோ பொறார்; மாறாக, அவற்றின் புகழ் பெருக்கவே விரும்புவர்; மன்னர்களின் இவ்வுள்ளுணர்வை உணர்ந்