பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 295 வருந்துகின்றேன்; புகழ் தேடி வந்த உன்னைப் பழிநாடி வருகிறதே என்ற உணர்வால் இது உரைக்கின்றேன்; உன் பெரும்படையால் வளைக்கப் பெற்றிருக்கும் இக்கருவூர்க் கோட்டையினுள் வாழ்வோன் இயல்பினை, நீ சிறிதும் எண்ணிப் பார்த்திலை போலும். சிறந்த ஓர் அரசன், பகைப்படை தன் தலைநகர் எல்லையில் வந்து தங்குவதையே தன் மற மானத்திற்கு இழுக்காக எண்ணி, அன்றே எதிர் வருவன். ஆனால் உன் படை கருவூர் நோக்கிப் புறப்பட்டது மட்டுமல்லாமல், அக்கருவூரை வளைப்பதும் செய்துளது; முற்றுகையிட்டு ஒரு நாளோ இரு நாளோ கழியாமல் கணக்கற்ற நாட்கள் கழிந்து விட்டன; ஆனால், கருவூர்க்கு உரியவனோ கதவை அடைத்துக் கொண்டு அகத்தே வாளா அடங்கியிருக்கின்றனனேயன்றி, ஆறாச்சினம் கொண்டு புறம் போந்து போரிடக் கருது கின்றானல்லன். அம்மட்டோ! கருவூரை வளைத்திருக்கும் உன் படை வறிதே ஆழ்ந்து கிடக்கவும் இல்லை. காவற் காட்டு மரங்களை வெட்டி வீழ்த்தும் அழிவுத் தொழிலை அயராது மேற்கொண்டுள்ளன; மரங்களை வெட்டி வீழ்த்தும் ஒலி, உள்ளிருப்போன் காதுகளில் சென்றும் துழைகிறது; காவற் காட்டு அழிவு, தன் அரசப் பெருஞ் சிறப்பின் அழிவு, தன் மறமானத்தின் அழிவு என்பதை அவன் உணர்ந்தான் அல்லன்; மரங்கள் மளமள என முறிந்து விழும் ஒலி கேட்டும், அவன் மறவுணர்வு கொண்டானல்லன்; காரணம், அதற்கேற்ற ஆண்மையோ, ஆற்றலோ அவன்பால் இல்லை; அதனால், அச்சத்திற்கு அடிமையாகி அடங்கிக் கிடக்கின்றான். அத்தகை யானோடு போரிடுவது ஆற்றல் மிகு மாவீரனாகிய உனக்குப் பெருமை தரும் செயலாகாது. இம்முற்றுகையால்