பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 இ. புலவர் கா. கோவிந்தன் உன் புகழ் மாசுறுவதல்லது மாண்புறாது; புகழ் தேடுகிறோம் என்ற உணர்வால், உள்ள புகழை இழந்து விடுவது உன்னொத்த பெரியோர்க்கு ஒவ்வாது; "ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடையார்!" என்றார் வள்ளுவர். புகழ் பெருக வாழ வேண்டிய நீ பழி பெற்று விடுதல் கூடாதே என்ற ஆர்வத்தின் மிகுதியால், என் உள்ளம் உணர்ந்த உண்மைகளைக் கூறி விட்டேன். இனி, மேலும் விடாது முற்றி அழிப்பதே மேற்கொண்டு பழி மேற்கொள்வதோ, முற்றுகையைக் கைவிட்டுப் புகழ் கொள்வதோ நின் செயல்,” என்றார். அவன் புகழ் வளர்ச்சியைக் காரணமாகக் காட்டிப் போர் ஒழிக்கும் பணியினை மேற்கொண்டார். "அடுநையாயினும், விடுநையாயினும் நீ அளந்தறிதி நின் புரைமை வார் கோல், செறியளிச் சிலம்பின், குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கின் தெற்றியாடும் தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக் கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கை நவியம் பாய்தலின் நிலையழிந்து வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும் கடிமரம் தடியும் ஒசை தன்னுர் நெடுமதில் வரைப்பின் கடிமனை இயம்ப ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் சிலைத்தார் முரசம் கறங்க மலைத்தனை என்பது நானுத்தகவுடைத்து." * -புறம் 36. சோழர் என்ற ஒரு குடியில் பிறந்திருந்தும், அரச வாழ்வின் மீது கொண்டு விட்ட ஆராக் காதலால், சோணாட்டின் உள்நாட்டுத் தலைநகராம் உறையூர் அரண்