பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 శ புலவர் கா. கோவிந்தன் ரானவரே உலகில் மிகப் பலராவர். அன்புணர்வு பிறப்பதற்கு வழி வகுப்பதே அச்ச உணர்வுதான். பழி கண்டு அஞ்சும் உள்ளத்தில்தான், புகழ் மீது கொள்ளும் அன்புணர்வு உருப்பெறும். அதனால்தான் ஆண்டவனை வழிபடு என அறிவுரை வழங்க வந்த நாவரசர், "அஞ்சி ஆயினும், கொண்டு ஆயினும், நெஞ்சம்! வாழி! நினை நின்றியூரனை !" என, அச்சங் காரணமான வழிபாட்டிற்கு முதல் இடம் அளித்துள்ளார். இப்பேருண்மையை அறிந்திருந்த காரணத்தால், பழந்தமிழ்ப் புலவர்கள், இப்போரின் முடிவு, உங்கள் ஆண்மை ஆற்றல்களுக்குப் பழியாம் என்றும், உங்கள் குடிப் புகழ் குன்ற வழி வகுக்கும் என்றும், அச்சங்காட்டி அமர் ஒழிக்க முனைந்துள்ளார்கள். ஆனால் அவ்வறிவுரையும் அவர்கள் எதிர்நோக்கிய அளவு பயன் தராது போகவே, பழிதரும் என்ற அச்சுறுத்தலைக் காட்டினும், பெரியதோர் அச்சுறுத்தலின் துணையை நாடியுள்ளார்கள். மக்கள் அனைவரும் அழியாப் பெருவாழ்வு பெற்று வாழவே எண்ணுவர். அதனால், தாம் வாழும் இடம் நிலையற்றது, தம் வளத்தை அழிக்க வல்லது என அறிந்த அக்கணமே அவ்விடத்தைக் கைவிட்டு அகல்வர். தம் வாழ்வும் வளமும் வற்றாது நிற்றற்காம் இடம் தேடிப் போதற்குச் சிறிதும் பின்னிடார். இந்நிலைக்கு மாறாக, வாழும் இடம் அழிக்கலாகா அரண் உடையது என்ற உணர்வுடையராகி விடின், அவ்விடம் விட்டு அகல எண்ணார். அகல எண்ணாமையோடு, ஆண்டே ஆண்டு பல வாழ்தற்காம் வழிவகைகளையும் தேடி அலைவர். மக்கள் இயல்பு இது.