பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ 301 இவ்வுலகம் நிலையற்றது; ஆனால், அது நிலையற்றது என்ற எண்ணம் வரப் பெற்றவர் உலகில் மிக மிகச் சிலராவர். நில்லாதவற்றை நிலையின என உணரும் புல்லறிவாளரே மிகப் பலராவர். இவ்வுலகமும், இவ்வுலக இன்பங்களும் நிலைபேறுடையன என்ற அறியாமை யுணர்வுடையார்க்கு, அறம் உணர்த்தல் அறிவுடைமை யாகாது; அவர் உள்ளத்தில் படிந்து கிடக்கும் அவ் வறியாமை இருள் அறவே அழிக்கப்படுதல் வேண்டும். அறியாமை அகன்ற உள்ளத்தில்தான் அறஉணர்வு வித்துன்றி வளரும். பழந்தமிழ்ப் புலவர்கள், இந்த உண்மையையும் உணர்ந்தவர்களாவர். உலகாளும் மன்னர்கள், இவ்வுலக வாழ்வு நிலைபேறுடையது; அரசப் பெருவாழ்வு அழிக்க லாகா அரண் பெற்றது என்ற உணர்வு கொண் டிருப்பதினாலேயே, அவர்கள் தங்கள் அரச வாழ்வைப் பெருக்கிக் கொள்வதில் ஆர்வம் கர்ட்டி அலைகின்றனர்; பேரரசு அமைக்கப் பேர்ர் போர் எனப் போர் வெறி கொண்டு திரிகின்றனர்; அதனால், அன்னார் போர் வெறியைத் தணிக்க வேண்டுமாயின், முதற்கண் இவ்வுலகம் நிலை பேறுடையது என எண்ணும் அவர் உள்ளத்தின் அறியாமையை அறவே அகற்ற வேண்டும். இவ்வுலகம் நிலையற்றது என்ற நிலையாமை உணர்வை அவர் நெஞ்சுணரப் பண்ணுதல் வேண்டும் என்ற உண்மை நிலையை உணர்ந்த காரணத்தால், நிலையாமை கூறிப் போர் ஒழிக்கும் பணியினை விரும்பி மேற்கொண்டார்கள். 'உடைவேல மரத்தின் இலையளவு சிற்றிடமும் பிறர்க்கு உரியதன்று எனப் போற்றிப் புகழுமாறு, கடல் சூழ்ந்த இப்பேருலகம் அனைத்தையும், தம் ஒரு குடைக்கீழ்