பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 இ. புலவர் கா. கோவிந்தன் வைத்துத் தாமே ஆண்ட பேரரசர் மிகப் பலராவர். கடல் அலைகள் கொழிக்கக் கரைக்கண் வந்து குவியும் மணலை எண்ணிக் காணினும் காணலாம்; ஆனால் அவ்வாறு ஒப்பற்ற பேரரசு அமைத்து உலகாண்ட உரவோர் தொகையினை எண்ணிக் காணல் இயலாது. அவ்வாறு ஆண்ட அரசர்கள், இறவாது இன்று வரை வாழ்ந்தார் ஒருவரும் இலர். தமக்கே உரியவாக எண்ணித் தாமே ஆண்டு வந்த அந்நாட்டைத் தமக்குப் பின்னர், பிறகு கைப்பற்றி ஆளுமாறு கைவிட்டு மாண்டு மறைந்தே போயினர்; உடம்பிற் குடிகொண்ட உயிர்களுள், அவ்வுடம்பை விட்டுப் பிரியாது, அவ்வுடம்போடே இரண்டறக் கலந்து வாழ்கிறது என்ற உயர்நிலை பெற்ற உயிர், இன்றுவரை இருந்ததில்லை. உயிர், குடிகொண்ட உடம்பை விட்டுப் பிரிந்து போவது, முக்கால உண்மையாம்; அது பொய்த்துப் போவது எக்காலத்தும் இல்லை!" என்ற, ஐயாதிச் சிறு வெண் தேரையார் என்ற ஆன்றோர் வழங்கிய அறிவுரை காண்க. - "இருங்கடல் உடுத்த இப்பெருங்கண் மாநிலம் உடையிலை நடுவணது இடைபிறர்க்கின்றித் தாமே ஆண்ட ஏமங்காவலர் இடுதிரை மணலினும் பலரே கடுபிணக் காடு பதியாகப் போகித் தத்தம் நாடுபிறர் கொளச் சென்று மாய்ந்தனரே அதனால் நீயும் கேண்மதி யத்தை! வியாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை; மடங்கல் உண்மை, மாயமோ அன்பற." - -புறம் 363 சிறு குன்றுகளும் பெரு மலைகளும் மண்டித் தமிழ் வேந்தர் மூவர்க்கும் ஒத்த உரிமையுடையதான தமிழகத்தை,