பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தி புலவர் கா. கோவிந்தன் நிலமாம் முல்ல்ை நிலத்துட் புகுந்து வாழத்தலைப்பட்டனர். முல்லை நிலம் புக்க மக்கள், அந்நிலம், காடும் காடு சார்ந்த நிலமுமாகி வாழ்வதற்கு வாய்ப்பளிக்கும் நிலமாக ஒரளவு விளங்குவது கண்டு ஆண்டே நிலையாக வாழத் தொடங்கினர். காடுகளை அழித்துப் பயிரிடவும், ஒரு சிறிது பழகினர். விலங்குகளோடு வாழ்ந்து பழகிய பழக்கத்தின் விளைவால், அவ்விலங்குகளுள் ஆடுமாடு, எருமை போன்றன. உடன் வைத்துப் பேணத் தக்கன, பெரும் பயன் தருவன என உணர்ந்தனர். அவ்வாறே அவற்றைப் பெருமளவில் வைத்துப் போற்றினர். அவர் தம் செல்வமாக ←ᎻéᏡᎧu போற்றப்பட்டன. அவர் செல்வ வாழ்வை அளந்து காட்டும் அளவு கோலாக அவை கொள்ளப்பட்டன. அவற்றை நிறையக் கொண்டார் செல்வ வாழ்வினராவர் எனவும், குறையக் கொண்டார். வறுமையில் வாடுவோ ராவர் எனவும் மதிக்கப் பெற்றனர். "ஓர் ஆன்வல்சிச் சீரில் வாழ்க்கை" குறுந் 295, "சிறப்பும் சீரும் இன்றிச் சிறுார் நல்கூர் பெண்டின் புல்வேய் குரம்பை, ஒர் ஆ யாத்த ஒரு துரண் முன்றில், ஏதில் வறுமனை’ (அகம்: 369), "தடமருப்பு எருமை மடநடைக் குழவி',"துரண்தொறும் யாத்த காண்தகு நல்இல்” (நற்: 120) என்ற தொடர்களில் புலவர்கள் கையாண்டிருக்கும் செல்வ அளவுகோலின் இயல்பினைக் காண்க. ஆகப் பண்டு, கால்நடைகளே செல்வமாகக் கொள்ளப்பட்டன. மாடு எனும் ஒரு சொல், ஆவைக் குறிக்க வழங்கும் சொல்லாதலோடு, செல்வத்தைக்குறிக்க வழங்கும் சொல்லும் ஆதல் இவ்வுண்மையை உறுதி செய்து நிற்றல் உணர்க. "கேடுஇல் விழுச்செல்வம் கல்வி, ஒருவற்கு மாடு அல்ல மற்றையவை’ (குறள்: 400 எனும் குறளில், மாடு எனும் சொல் செல்வம் எனும் பொருளில் ஆளப்