பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி : 31 பட்டிருப்பது. அறிக. இவ்வாறு, முல்லை நிலம் புக்க மக்கள், ஆண்டு ஆனிரைகளைப் பேணிப் பெருக்கி வாழ்ந்தமை யால் அவர்கள் வாழ்வு ஓரளவு அமைதியுடையதாயிற்று. மோர் விற்றுப் பெறலாம் சிறுபணத்தால் உணவுப் பொருள் வாங்குதல் வேண்டும்; நெய் விற்றுப் பெறலாம் பெரும் பணத்தால் பசும் பொற்கட்டி வாங்குவதினும், பசுங் கன்றும் எருமை நாகும் வாங்குதல் வேண்டும் என்பதை அறிந்திருந்த ஆயர் முதுமகளிரின் வளத்தக்க வாழ்க்கை வனப்பினைப் புலவர் பாராட்டும் நிலை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னரே இடம் பெற்றுவிட்டது. "ஆய்மகள் அளைவிலை உணவிற் கிளையுடன் அருத்தி, நெய் விலைக்கட்டிப் பசும்பொன் கொள்ளாள், எருமை, நல் ஆன், கரு நாகு பெறுஉம்” என்ற பெரும் பாணாற்றுப்படை அடிகளைக் காண்க. நிற்க. - குறிஞ்சி நிலத்தே வாழ்க்கையைத் தொடங்கிய மக்கள் அனைவருமே முல்லையுள் குடி புகுந்து விட்டாரல்லர். ஒரு சிலர் அக் குறிஞ்சியிலேயே தங்கி விட்டனர். ஒரு சிலர், இடைவழியில் இருந்த பாலை நில வாழ்க்கையிலேயே பழகிவிட்டனர். பாலை, குறிஞ்சி நிலத்தின் மலை வளமோ 1."DomesticatedCattleexisted in Egyptabout3500B.C.andpossibly much earlier. The word Cattle, etymologicaly merely denote a form of property. Before the days of settled Community, nomadic man possessed herds of cattle which represented his wealth." - - - Encyclopaedia Britanica Vol.5, Page 46. Cattle, old English 'Catel' = goods Cattle from old French, "Catel", "chatel" = property in general From later Latin "Capitale", "Capitale' = property, Capital. From Latin "Capitalis" Chief, Capital From Caput = The head Cattle - Chattel - Capital. - -