பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ↔ புலவர் கா. கோவிந்தன் நாடுகளுள் புகுந்து, ஆனிரைக் காவலரை அழித்துவிட்டுக், கன்றுகளோடும் காளைகளோடும் கூடிய ஆனிரையை இரவோடு இரவாகக் கொண்டு சென்றோராகிய, வேங்கடத்திற்கு அப்பால் உள்ள நாட்டை வாழிடமாகக் கொண்ட வடுகர் வரலாறும், பசித்தவர், பக்கத்தில் உள்ளார் பொருளைக் கொள்ளையிட்டுச் செல்லும் கொடுமையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதே, ஆனிரை கவரும் வெட்சியர் தொழில் என்பதை உறுதி செய்வது உணர்க. இவ்வொழுக்கம் பண்டைத் தமிழகத்தில் மட்டுமே - பண்டைத் தமிழரிடையில் மட்டுமே இடம் பெற்றிருந்தது என்று எண்ணற்க. நாகரிகத்தின் நிழல் தோன்றாத் தொடக்க நிலையில் உலகெங்கும் நிகழ்ந்தது இதுவே என்பதற்கான உலக வரலாற்றுச் சான்றுகள் நிறைய உள: f பசித்தவர், பக்கத்தில் உள்ளார் பொருளைக் கொள்ளையடித்து உண்ணும்கொடுமையை அடிப்படை 1. "Warlike for aiming at the seizure of movable wealth played a considerable role in human history down to comparatively recent times. The Syrian Coast civilization was always exposed to Bedo win raids. The Balkan Peninsula and the region south of Caucasus were anciently harassed by the Scythians. The chinese centers of culture have been subject to frequent attacks by the wild horsemen of Mongolia and Siberia." - Encyclopaedia of the Social Science: 12:331 "All Cattle raids were chiefly for Cattle. There were large number of hymns in the Atharva Veda, praying for the portection of Cows and Cattle. To the primitive men Cattle constituted wealth and a Cattle raid meant the loss of ones property. This primitive from the Cattle lifting survived even when people became civilized is seen in the Mahabaratha." —The Art of War in Ancient India, by V.R.R.