பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 35 யாகக் கொண்டதே, நிரைகவரும் வெட்சியார் ஒழுக்கம் என்ற கருத்தினையே, புறப்பொருள் வெண்பா மாலைச் செய்யுட்களும் வற்புறுத்துகின்றன. வெட்சியாவது, வேற்றரசர் நாட்டுப் பசு நிரைகளைப் பற்றிக் கொணர்தல். அஃது இரு வகைப்படும். அரசன் ஏவ அவன் வீரர் சென்று கைப்பற்றிக் கொணர்தல். வீரன் ஒருவன் தானே சென்று கைப்பற்றிக் கொணர்தல் என்பனவே அவ்விரண்டும் என்று கூறி, அவற்றை விளக்குவதற்கு இரு வெண்பாக் களையும் அளிக்கிறது அப்புறப் பொருள் வெண்பாமாலை. அவ்வெண்பாக்களின் பொருளை நோக்கினால், வெட்சித் திணை குறித்து, ஈண்டுக் கூறிய கருத்தே ஏற்புடைத்தாம் என்பது இனிது விளங்கும். வீரன் தானே சென்று ஆனிரை கவர்தலாம் தன்னுறு தொழில் எனும் துறைக்கு எடுத்துக்காட்டாக வந்த பாட்டில், ஒர் ஊரின் இயல்பு உணர்ந்தான் ஒருவன், அவ்வூர்க் கள்விலையாட்டிபால் சென்று, அவள்பால் வழக்கமாக வந்து கள்ளுண்ணும் ஒரு வீரன், கடுஞ்சின முடையவனாய்க் காலில் கழல் புனைந்து நிற்பதை அறிவித்து, அவன் நிலை நிரைகோடற்குச் செல்கின்றனன் என்பதை உறுதியாக்குகிறது. ஆகவே, நாளைக் காலை அவன் கைப்பற்றிக் கொணரும் பகைவர் நாட்டுப் பசுநிரைகள் நின் கடையின் மன்றத்தே கள்விலையாகக் கொண்டு நிறுத்தப் போவது உறுதி. ஆகவே, கள்விலை யாகத் தரக்கூடிய பொருள் எதுவும் அவன்பால் இல்லை யெனக் கொண்டு, அவனுக்குக் கள் அளிக்க மறுத்து விடாதே! மறுப்பதை அம்மறவன் இனியும் பொறுத்துக் கொள்வானல்லன் ! எனக் கூறியதாகக் கூறப்பட்டுள்ளது. "அறாஅ நிலைச்சாடி ஆடுறு தேறல் மறாஅல்; மழைத்தடங் கண்ணி! - பொறாஅன்