பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ 37 அவன் செயல் விட்டெரியும் பெருநெருப்பினிடையே மேலும் பல மரங்களை வெட்டியிடுவது போலாம் என உணர்ந்தான். உடனே அவ்வில் வீரனை அழைத்து, அவன் வேற்படை ஆற்றலையும், காளைபோலும் அவன் இளமைச் செவ்வியினையும் நனிமிகப் பாராட்டிய பின்னர், பகைவர் படையைப் பாழ்படுத்தி, அவர் தம் ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொணருமாறு பணித்தான் என்ற பொருள் அமையப் பெற்றுள்ளது. - "மண்டும் எளியுள் மரம் தடிந்து இட்டற்றாக் கொண்ட கொடுஞ்சிலையன் கோல் தெரியக் - கண்டே அடையார் முனையலற, வை இலை வேல் காளை! விடைஆயம் கொள்களன்றான் வேந்து.” -lിഖ. ു.1 இப்பாட்டின் பொருளைப் பார்ப்பதன் முன்னர், அக்கால அரசன் இயல்பு யாது? அவனுக்கும் அவன் நாட்டு மக்கட்கும் இடையே நிலவிய உறவு எத்தகைத்து? என்பனவற்றை அறிந்துகொள்வது மிகவும் நன்று. தொடக்க நிலையில் எவர்க்கும் அடங்கி வாழாது தத்தம் விருப்பம் போல் தனித்து வாழ்ந்து பழகிய மக்கள், நாளடைவில் தம்மையும் தம்பொருளையும் பேணிப்புரக்கும் தலைவன் ஒருவன் தேவை என உணர்ந்து, அத்தகைய தலைவனைத் தம்முள்ளே தேர்ந்து கொண்டனர். அவ்வாறு தேர்ந்து கொண்ட அத்தலைவனே பிற்காலத்தில் அரசன் என அழைக்கப் பெற்றான். அக்காலத்தில் அரசனே அனைத் தும். மக்கள் உயிரே மன்னன்தான். மக்களுக்கு உணவளித்துப் புரப்பதும், அவன் கடனே, எதற்கும், மக்கள் மன்னனையே எதிர் நோக்கினர். தம் வளமார் வாழ்விற்கும் அவனே காரணம்; தம் வறுமைத் துயர்க்கும் அவனே காரணம் எனக் கருதினர். அதனால் வளமார் வாழ்வு