பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 புலவர் கா. கோவிந்தன் பெற்றக்கால் அவனை வாழ்த்தினர்; வணங்கினர்; வறுமையில் வாடிய்க்கால், அவனைத் துாற்றினர்; தொலைக்கவும் துணிந்தனர். அரசனும் அவன் குடிகளும் அன்று கொண்டிருந்த உறவும் தொடர்பும் இன்ன. அரசனும் அவன் குடிகளும் அன்று கொண்டிருந்த இவ்வுறவு முறையினையுட் கொண்டு, புறப்பொருள் வெண்பாமாலைப் பாடற் பொருளைப் பார்த்தல் வேண்டும். அரசன் படையைச் சேர்ந்த வீரன் ஒருவன், போருக்கு ஆவன புரியலாயினன். ஆனால், போருக்குப் போகுமாறு அந்நாட்டு அரசன், அவனை அப்போது பணிக்கவில்லை. போரிடும் எண்ணமே அரசனுக்கு அப்போது உண்டாகவில்லை. ஆகவும் அவன் வீரன் படைக்கலம் ஏந்த எண்ணுகின்றான். இதைக் கண்ணுற் றான் அரசன். அவன் படைக்கலம் ஏந்துவது ஏன் ? என எண்ணலாயினன். பயிற்சி பெற்ற படையமைத்து வாழும் அரசன், அப்படை வீரர்க்குக் குறைநேரா வண்ணம் நின்று காக்க கடமைப் பட்டவனாவன். நாட்டு மக்கள் துயர் துடைப்பதினும், படையாளர் துயர் துடைத்தலை அரசன் விரைந்து மேற்கொள்ளுதல் வேண்டும். நல்ல போர் வீரர்களைத் தேர்ந்து பணி கொள்வ தோடு தன் கடமை தீர்ந்து விட்டதாகாது. தன் வாழ்வும் தன் நாட்டின் வாழ்வும் அப்போர் வீரர்களின் அயரா நற்றொண்டிலேயே அமைந்துள்ளன. ஆதலின், அரசன் வாழ்வே தம் வாழ்வு, அவன் பொருட்டு உலையாது உழைப்பதே தம் கடனாம் என்ற உணர்வு அவர் உள்ளத்தில் இயல்பாகவே ஊற்றெடுத்துப் பெருகி எந்நிலையிலும் பாய்ந்து கொண்டே யிருக்கும் வகையில், அவர் உள்ளம் உவக்கும் உறுபொருள்களை ஓயாது அளிப்பதும் தன்