பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 41 பாராட்டுமாறு வெளிப்படுத்தற்காம் வாய்ப்போடு, தன் - வறுமை ஒழிந்து வளம் பெறுதற்காம் வழியும் கிடைப்பது காணும் வீரனும், தன் அரசன் மீது சென்ற சினத்தைச் சிதைத்துப் பகை நாட்டு ஆனிரைமீது போக்குவன். ஆகவே, மன்னுறு தொழிலாக எழும் வெட்சியும், வீரன் வறுமை காரணமாகவே எழுவதாம் என்பது தெளிவு. ஆகப் பசித்தவர் பக்கத்தில் உள்ளார் பொருளைக் கொள்ளை பிட்டு வருவதற்கு எழுவதே வெட்சியாம் என்ற உண்மை இதனானும் உறுதி செய்யப்படும். படவே, பொருள் ஈட்டி வாழ மாட்டாப் பாலை நிலத்து மறவர், ஆனிரைச் செல்வத்தால் அகமகிழ்ந்து வாழும் முல்லை நிலத்து ஆயர் பொருளைக் கொள்ளையிட்டுண்ட கொடிய ஒழுக்கத் தினை ஒட்டியே மன்னுறு தொழிலாம் வெட்சியும் தொழிற் படுகிறது என்பது முடியாதல் உணர்க. பாணர் முதலாம் இரவலர் தம் இன்மை நிலை கூறிவந்து இரந்து நிற்க, அவர்க்குத் தருதற்காம் பொருள் தன்பால் இல்லையாகவே, அப்பொருளைப் பிறநாடுகளில் இருந்தேனும் கொணர்ந்து தகுதல் வேண்டும் என்னும் கருத்துடைய கொடை வீரன் ஒருவன், தனக்குப் படைக்கலம் பண்ணித் தரும் தன்னுரர்க் கொல்லன்பால் அவ்விரவலர் கூட்டத்தை அழைத்துச் சென்று, அவனுக்கு அவர்களின் வறுமைக் கொடுமையைக் காட்டி, அது துடைக்கத் தான் மேற்கொள்ளப் போகும் போர்க்கு வேண்டும் படைக்கலங்களைப் படைத்துத் தருமாறு வேண்டுவன் என்னும் பொருள் அமைய வந்த புறநானூற்றுச் செய்யுளும், பசித்தவர், பக்கத்தில் உள்ளார் பொருளைக் கொள்ளையிடுவதற்கு மேற்கொள்ளும் போரே வெட்சிப் போராம் என்ற உண்மையினை உறுதி செய்து நிற்றல் காண்க: - -