பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 43 மகிழ்வர் என்ற செய்தியைத் தெரிவிக்கும் அகநானூற்றுச் செய்யுளும், "உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பில் வடியுறு பகழிக் கொடுவில் ஆடவர் அணங்குடை நோன்சிலை வணங்க வாங்கிப் பல்லான் நெடுநிரை தழிஇக் கல்லென வருமுனை அலைத்த பெரும்புகல் வலத்தர் கனைகுரல் கடுந்துடிப் பாணி துங்கி உவலைக் கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் கவலை’ -அகம் 159 பண்டு ஆனிரை கவர்ந்தார், தம் வறுமை போகவே கவர்ந்தவராவர் என்பதை நிலை நாட்டி, வறுமையுற்றவர், தம் வயிற்றுப் பசியினைப் போக்க மேற் கொண்ட ஒழுக்கமே வெட்சி ஒழுக்கம் என்ற உண்மையினை உறுதி செய்து நிற்றல் உணர்க. உயிரினங்களுள் ஆண்களைக் குறிக்கும் பெயர்கள் இவை இவை; அப்பெயர்களுள் இன்ன பெயரால் குறிப்பிடப் பெறும் ஆணுயிரினங்கள் இவை இவை என்பனவற்றை விளக்கும் பகுதியில், மோத்தை, தகர், உதள், அப்பர் என்ற இவை ஆட்டின் ஆண் இனத்தைக் குறிக்கும் பெயர்களாம். "மோத்தையும் தகரும், உதளும், அப்பரும் யாத்த என்ப யாட்டின் கண்ணே (மரபு. 47 என்ற ஆசிரியர் கூற்றிலோ, ஆசிரியர். கூறாதனவற்றை, மிகையாலும், இலேசாலும் கொள்ளும் உரிமையுடைமையால், “யாத்த என்றதனால், கிடாய் என்பதும் யாட்டிற்குப் பெயராகக் கொள்க’ எனக் கூறும் உரையாசிரியர் கூற்றிலோ, ஆட்டின் ஆனைக்குறிக்கும் பெயர்களுள் ஒன்றாக விடை’ என்பது கொள்ளப்படவில்லை யாதலாலும், குரங்கின் ஏற்றைக் கடுவன் என்றலும்" எனத் தொடங்கும் சூத்திரத்தின்