பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி ళీ 45 வீரன் ஒருவன் பகைநாட்டு நிரை கவர்ந்து வந்து, கடன் தீர்த்துக் கள் குடித்தும், கறிச்சோறுண்டும் களிக்கும் நிகழ்ச்சியை விளக்க வந்திருக்கும், "நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி, இல்லடு கள்ளின் தோப்பி பருகி மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி’ (141-143) என்ற பகுதியில் இடம் பெற்றிருக்கும் "விடை’ என்ற சொல்லிற்கு ஆட்டின் ஆனைக் குறிக்கும் "கிடாய்” என்று பொருள் கூறாமல், மாட்டின் ஆணைக் குறிக்கும் 'ஏறு” என்றே பொருள் கூறியுள்ளாராதலின், நிரை கவர்ந்த அவ்வீரன், ஆண்டு அறுத்துத் தின்றது, ஆனேற்றின் கறியே அல்லது, ஆட்டுக்கிடாயின் கறி அன்று என்பதே நச்சினார்க்கினியர் கருத்தாலும் புலனாகும். ஆகவே, "செங்கண் மழவிடை கெண்டிச்சிலை மறவர் வெங்கள் மகிழ்ந்து விழவு அயர” (பெரும்பொருள் விளக்கம்), "நறவும் தொடுமின் விடையும் வீழ்மின்" (புறம்:262 எனவரும் இடங்களில் எல்லாம், விடை என்பதற்கு ஆனேற்றைக் குறிப்பதாகவே பொருள் கோடல் வேண்டும். அதை விடுத்து, ஆட்டுக் கிடாய் என வலிந்து பொருள் கொள்வது பொருந்தாது. மேலும் 'ஆ' என்ற பெயரால் குறிக்கப்படும் பெண் இனங்களுள் மாடு இடம் பெற்றுள்ளதேயல்லது ஆடு இடம் பெறவில்லை. பெற்றமும் எருமையும் மரையும் ஆவே என்பது காண்க. ஆகவே, "கொழுப்பு ஆ எறிந்து (அகம்.309) என்பதற்குக் கொழுத்த ஆட்டை வெட்டி என்ற பொருள் பொருந்தாது. நாவலர் நாட்டார் அவர்களும், கரந்தைக் கவியரசர் அவர்களும் 'கொழுப்பினையுடைய பசுவினைத் தடிந்து என்றே பொருள் கூறியுள்ளமையும் உணர்க. ஆனால், பசுவை அதன் பாற் பயன் அறிந்து போற்றும் பண்பட்ட பெருநிலையைத் தமிழர், தொல்