பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 ஒ. புலவர் கா. கோவிந்தன் காப்பியர் காலத்திற்கும் முற்பட்டதான தொல்பெருங் காலத்திலேயே அடைந்து விட்டனர் என்பது உண்மை. வெட்சியாவது யாது என்பதை விளக்குங்கால் ஆசிரியர் தொல்காப்பியனார், "ஆ தந்து ஓம்பல்” எனப் புலத்தலைப் புல்லார்த்தி, அலைத்தலை நீரூட்டிப் பேணலாம். ஓம்பல் தொழிலை வெட்சியார்க்கு ஏற்றிக் கூறுவதும், கைப்பற்றிய ஆனிரைகளை வெட்சியார் வழியிடைச் செலுத்திச் செல்லும் துறையினைக் கூறுங்கால். தொல்காப்பியனார் "நோயின்று உய்த்தல்” என்றும், புறப்பொருள் வெண்பா மாலையார், "அருஞ் சுரத்தும் அகன் கானத்தும் வருந்தாமல் நிரை உய்த்தன்று” என்றும் துயர் செய்யாத் துய்மையினை விதந்து கூறுவதும் இந்நிலையிலேயே வேண்டுவனவாயின. பிறர் நாட்டு ஆனிரைகளைக் கவர்ந்து வருதல் தம் வயிற்றுப் பசிகளைத் தீர்த்துக் கோடற்கு அன்று. ஒரு நாட்டின் மீது படை தொடுத்துச் செல்வோன் அவ்வாறு செல்வதன் முன்னர், அந்நாட்டு ஆனிரைகளை, அவை, தம்படையாளரால் பாழுறாவாறு பற்றிப் பாதுகாவலான தோரிடத்தில் வைத்துக் காத்தற் பொருட்டே என்ற நிலை வந்துற்ற பின்னர், அவ்வாறு ஆனிரை கைக்கொண்ட அரசன் ஒருவன், அந்நாட்டோடு பகையொழிந்து போய விடத்தும், அவ்வானிரைகளைத் தன் பாலே இருத்திக் கோடல் போர் அறம் ஆகாது உன உணர்வானாயினன். அவ்வாறு உணர்ந்த அக்காலத்தில், கைப்பற்றிய ஆனிரை களை அவற்றிற்கு உரியவர்.பால் ஒப்படைக்கும் உயர்ந்த ஒழுக்கமும் உருப் பெறலாயிற்று. தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறையின் படைவீரர், கழுவுள் எனும்