பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 47 பகைவன் நாட்டு ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொண்டா ராக, அவ்வானிரைக்குரிய ஆயர், தங்கள் தலைவனாம் கழுவுள் சேரர் படையினைப் பாழ் செய்து தம் ஆனிரை களை மீட்டுத் தரும் ஆற்றல் இலனாதல் அறிந்து, தாமே முன் வந்து, சேரர்படை வீரர்க்கு அவர் விரும்பும் நிறைப் பொருளாகச் சில ஆனிரைகளைத் தந்து பகை யொழிக்கவே, பெருஞ்சேரல் இரும்பொறையின் படை வீரர், ஆங்குத் தாம் பற்றிய அவ்வாயர் தம் ஆனிரைகளை அவர்பாலே ஒப்படைத்து மீண்டனர். அஃதறிந்த கழுவுள், பின்னர்ப் போந்து பணிந்தனன் எனக் கூறும் பதிற்றுப்பத்து நிகழ்ச்சி, வெட்சியொழுக்கத்தின் வளர்ந்த நிலையினை விளக்கி நிற்றல் உணர்க. - “ஏறொடு, கன்றுடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து புலவுவில் இளையர் அங்கை விடுப்ப மத்துக் கயிறுஆடா வைகற்பொழுது நினையூஉ ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப் பதிபாழாக வேறுபுலம் படர்ந்து." -பதிற்று:71 புறப்பொருள் திணைகளுள், வெட்சித் திணை முதற்கண் வைத்து எண்ணப்படுகிறது என்றாலும், அது அத்துணைச் சிறந்த ஒழுக்கம் அன்று. போர்மேற்கொள்ளும் அரசர் செயல்களுள், முதற்கண் மேற்கொள்ளப்படும் செயலாக அது கருதப்படினும், உண்மையில் அது அரசர்க்குரிய ஒழுக்கம் அன்று என்பது, புறப்பொருட்கண் வரும் ஏனைத் திணைகளின் துறைகளோடு இவ்வெட்சித் திணைக்குரிய துறைகளையும் ஒப்பிட்டு நோக்கின் உணரலாகும். போர்கள் இருவகைப்படும். ஒன்று சென்று தாக்கும் போர். பிறிதொன்று நின்று தாக்கும் போர். புறத்திணைக்