பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 இ. புலவர் கா. கோவிந்தன் கண் கூறப்பெறும் போர்களுள் வெட்சிப் போரும் வஞ்சிப் போரும் சென்று தாக்கும் போர்களாம்; கரந்தை காஞ்சிப் போர்கள் நின்று தாக்கும் போர்களாம். ஆகவே, முன்னைய இரண்டினையும் ஓரியல்புடையவாகவும், பின்னைய இரண்டினையும் ஓரியல்புடையவாகவும் கோடல் வேண்டும். இவ்வகையால், வெட்சியும், வஞ்சியும் ஓரியல்புடையவாகக் கருதப்படினும், வெட்சிப் போர், வஞ்சிப்போர் போல் பாராட்டப் பெறுவதில்லை. பகைவர் ஆனிரை கவர்ந்து கொண்டனர் என்ற செய்தியைக் கேட்டு அதை மீட்க முனையும் கரந்தையாரோ, பகைவர் தம் நாட்டு எல்லையைக் கைப்பற்றிக் கொண்டனர் என்பதைக் கேட்டு, அதைக் காக்க விரையும் காஞ்சியாரோ, காலமும், இடமும், தன்வலியும் மாற்றான் வலியும் பார்த்துப் புறப்படல் இயலாது ஆகவே, அவர்கள் படையெடுப்பிற் காம் நல்ல நாளைத் தேர்ந்து கொண்டு, அந்நாளில் குடையையும் வாளையும் முதற்கண் புறவீடு போக்கிப், பின்னர்த் தாம் புறப்படுவது என்பது ஏலாது. ஆனால், நிரை கொள்ளக் கருதும் வெட்சியானுக்கோ, பிறர் மண் கொள்ளக் கருதும் வஞ்சியானுக்கோ அந்த விரைவு இல்லை. ஆகவே, அவர்கள் இடம், காலம், வலி முதலாயின வற்றை ஆராய்ந்து, நல்ல நாளில் போர் மேற்செல்லுதல் பொருந்தும், ஆக, அவ்வாய்ப்பு அவ்விருவர்க்குமே ஒத்த இயல்பினதாக, வாள் குடைகளைப் புறவீடு போக்குவதை வஞ்சியானுக்கு மட்டும் வகுத்து, வெட்சியானுக்கு வரைந்து தராதது பின்னதன் சிறப்பின்மையினையே குறிப்பதாம் என்க. - - - படை யெடுத்துச் செல்லுங்கால், தம் படை யெடுப்பைப் பறைசாற்றும் போர் முரசு முழங்கிப் போர்