பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இ. புலவர் கா. கோவிந்தன் பகைவர் நாட்டு ஒற்றர் உணரா வகைச் சென்றனர்; பகைவர் நாட்டு ஒற்றர் உணராவகை ஒற்றி வந்து உரைத்தனர் - "புடைகெடப் போகிய செலவே", "புடைகெட ஒற்றின் ஆகிய வேயே” (தொல், புறம்:) என உரைத்தலும், அவற்றிற்கு முறையே, "மாற்றரசர் பக்கத்த ராகித் தம் மாட்டு ஒற்றொடு நிற்பார் அறியாமல் போதல்", "மாற்றரசர் பக்கத்தில் உள்ளார் அறியாத வகை ஒற்றரால் ஆகிய ஒற்றுதலும்” என உரையாசிரியரும், "பற்றார் புலத்து ஒற்றர் உணராமல் பிற்றை ஞான்று சேறலும்”, “பகைப் புலத்து ஒற்றர் உணராமல் சென்று ஒற்றி உணர்த்திய குறளைச் சொல்” என நச்சினார்க்கினியரும் உரை வகுப்பதும், அவ்விரு துறைக்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப் பெற்றுள்ள செய்யுட்கள். "பிறர்புலம் என்னார், தமர்புலம் என்னார், விறல் வெய்யோர் வீங்கு இருட்கண் சென்றார்” என்றும்,"ஒருவர் ஒருவர் உணராமல் சென்று ஆங்கு இருவரும் ஒப்ப இசைந்தார்” என்றும் அமைதலும், பகை நாட்டு ஆனிரை நின்ற நிலையும், நிரை அளவும், நிரைப்புறத்து நின்ற சிலை அளவும் செரு முனையுள் வைகிச் சென்றறிந்து வந்த ஒற்றர் செயலைக் கூறும் புறப் பொருள் வெண்பா மாலைச் செய்யுள், "நல்லிருட்கண் வந்தார் நமர்” எனக் கூறுதலும், ஆனிரையைக் காத்து நிற்கும் படைவீரரைக் கொன்று, கன்றுகளோடு கூடிய பெரிய நிரையைத் தம்மன்று நிறையக் கொண்டு செல்லும் கொடியோராகிய வடுகரும் ஆரிருள் நடுநாள் போதிலேயே அதைச் செய்வர் என 'ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்யப் பகைமுனை அறுத்துப் பல்லினம் சா அய்க். கன்றுடைப் பெருநிரை மன்று நிறை தரூஉம் நேராவன் தோள்வடுகர்" என அகநானூறு (253) அறிவிப்பதும், வெட்சி ஒழுக்கம்