பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 55 மேற்கொள்ளும் வழிமுறை அதுவே என்பதை விரிச்சி என்பதனை விளக்கிப் பொருள் கூறும், "வேண்டிய பொருளின் விளைவு நன்கு அறிதற்கு ஈண்டு இருள் மாலை சொல் ஒர்த்தன்று” என்ற புறப்பொருள் வெண்பாமாலைக் கொளுவில், "நன்கு அறிதற்கு", "ஈண்டு இருள் மாலை”, "சொல் ஒர்த்தன்று” என்பன போலும் பொருள் பொதிந்த சொற்களைப் பெய்து வைத்திருக்கும் புலவர் போக்கு உறுதி செய்வது உணர்க. மக்கள் ஒப்புதல் பெற்றே மன்னர் வினையாற்றுதல் வேண்டும் என்ற அரசியல் உண்மை உணர்ந்த நிலையில், மன்னர் அம்மக்கள் மனக்கருத்தை அறியும் முறையினைக் கூறுவதே விரிச்சி எனும் துறையின் விளக்கம் பெறும் முதற் பொருளாகவும், அது நாளடைவில், நிமித்தம் பார்த்தல் எனும் நிலைக்குத் தாழ்ந்து விட்டது. தம் ஆற்றலால் ஆகாது எனத் தன்னம்பிக்கை இழக்கும் தாழ்நிலையினராகி விட்ட மக்கள் எடுத்துக் கொண்ட வினை இனிதே முற்றுப் பெறுமோ, இடையே மடங்கி மாண்பிழந்து போகுமோ என்ற ஐயுணர்வு உற்று, தம் ஆற்றலால் ஆகாதது, நற்சொல், நன்னிமித்தம் போன்றனவற்றால் ஆகும் என நம்பி விட்ட நிலையிலேயே, விரிச்சி, அப்பின்னிலைப் பொருள் பயக்கலாயிற்று. - "கார்காலத் தொடக்கத்தில் வந்து விடுவேன்!" என்று கூறி வினைமேற் சென்ற தலைவன், கார்காலம் தொடங்கி நாள் பல கழிந்த நிலையிலும் வந்திலனாக வருந்தும் தலைவியின் துயர் கண்ட செவிலித்தாய், மன்றிடை நிற்கும் கோயிற்குச் சென்று. நெல்லும் மலரும் துரவித் தலைவன் விரைவில் வர வேண்டி வணங்கி வழிபாடாற்றி இருந்தாளாக, அப்போழ்து, காலையில் காடு புகுந்த தன்