பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 இ. புலவர் கா. கோவிந்தன் கறவைகள் மாலை ஆகியும் வராமையால் வருந்தும் கன்றுகளின் துயர் தாங்க மாட்டா ஆய்மகள் ஒருத்தி, கார் காலத்துக் குளிர் உடலை உலுக்குவ தாகவும், அதைப் பொருட்படுத்தாது, கன்றுகளோடு ஊர்க் கோடியில் உள்ள அக்கோயில் வரையும் வந்து, மாலைவர மனை திரும்பும் ஆயர் வரவை எதிர்நோக்கி நின்று அக்கன்றுகளுக்கு ஆறுதல் உரைப்பாளாய், "கன்றுகாள்! கோவலர் பின் நின்று ஒட்டி வர, உம் தாயர் விரைந்து ஓடி வருவர்; வருந்தற்க!” என்று கூறினாள். வினைமேற் கொண்டு வேற்றுரர் சென்றிருக்கும் தலைவன் விரைந்து வந்து சேர்வனோ என்பதை அறிய விரிச்சி வேண்டி நிற்கும் செவிலியின் காதுகளுள், "வருவர் நின் தாயர், வருந்தற்க!” என்ற ஆய்மகள் வாய்ச்சொல், நற்சொல்லாய், நன்னிமித்த மாய்ப்பட்டு, தலைவன் வருவன் என்ற உறுதியை அளிக்க, உளம் தேறித், தலைவியை அடைந்து, விரிச்சியின் விளைவு கூறி ஆற்றினாள் என்ற முல்லைப் பாட்டுச் செய்தியில் விரிச்சி முறை விளக்கப்பட்டுள்ளது. "அருங்கடி மூதூர் மருங்கில் போகி யாழ் இசை இனவண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறுவி முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கை தொழுது பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்பச், சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறுதுயர் அலமரல் நோக்கி ஆய்மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள், கைய கொடுங்கோல் கோவலர் பின்நின்று உய்த்தர இன்னே வருவர் தாயர் என்போள் நன்னர் நன்மொழி கேட்டணம்; அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள்; தெவ்வர்