பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 57 முனைகவர்ந்து கொண்ட திறையர் வினைமுடித்து வருதல் தலைவர் வாய்வது; நீ நின் பருவரல் எவ்வம் களை மாயோய் p -முல்லை; 7-21 அம்முறைப்படி நிரைகவரத் துணிந்த வெட்சியார், தம் வினைக்கண் வெற்றி வாய்ப்பினை வேண்டி விரிச்சி அறிந்து வரச் சிலரை ஏவ, சென்றவர் விரிச்சி வேண்டி நிற்கும் நிலையில், யாரோ ஒர் எயிற்றி, யாரையோ விளித்து, "தொழுவில் இருக்கும் குடக்கண் ஆவைக் கொணர்க!” என்று கூறினாளாக, அதையே நற்சொல்லாகக் கொண்டு, விரிச்சி நன்னிமித்தம் வாய்த்து விட்டதாக நினைந்து கொண்டு, நெஞ்சுறுதி மிக்கு நிரை நோக்கிச் செல்லலாயினர். வயிறுகாய் பெரும் பசி வந்துற்றகாலை அதை எப்படியாவது தீர்க்க வேண்டும் என்ற எண்ணம் ஒன்று மட்டுமே தலைதுாக்கி நிற்குமே யொழிய, அந்நிலையில், இதற்கு ஊரார் ஒப்புகின்றனரா? நல்ல நிமித்தம் கிடைத்ததா? என்றெல்லாம் எண்ணிப் பார்க்க இடம் தராது ஆதலின், வெட்சியாவது, பக்கத்தில் உள்ளார் பொருளைப் பசித்தவர் பறித்து உண்பது என்ற தன் தொன்னிலை திரியாதிருந்த காலத்தில், விரிச்சி எனும் துறை, மக்கள் மனக் கருத்து அறிதல் என்ற நிலையிலாவது, நற்சொல் கேட்டல் என்ற நிலையிலாவது இடம் பெற்றிருப்பது இயலாது. அவ்வெட்சி, தன் தொன்னிலை கெட்டு, மாற்றானோடு போர் தொடுக்கும் மன்னனின் முதல் நிகழ்ச்சி என்ற நிலை அடைந்த பிற்காலத்திலேயே அது, அப்பொருளில் இடம் பெற்றிருத்தல் வேண்டும். அந்நிலையிலும் மக்கள் மனநிலையை மன்னன் அறிதல் என்ற பொருள் நிலையே முதற் கண்ணதாக, நற்சொல் கேட்டல் என்ற பொருள்நிலை, மக்களும், மன்னர்களும் தம்