பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 இ. புலவர் கா. கோவிந்தன் நிலையிலும், ஆயர் புறச்சேரி, மதிற்புறத்தே அமைந்துள்ள காவற் காட்டிடத்ததாகி, ஆனிரைக்குப் புல் அளிக்கும் அரும்பயன் உடைமை நோக்கிப் போலும், பசித்தவர் பக்கத்தில் உள்ளார் பொருளைப் பறித்து உண்பதே வெட்சியாம் என்ற நிலையில், "ஊர் கொலை” எனும் துறை, முல்லையை அடுத்த குறிஞ்சி நிலத்தில் ஆயர் அமைந் திருந்த குறும்பு எனும் சிற்றரண்களின் அழிவினைக் குறிக்கும் என்றால் - “குரை அழல் நடப்பக் குறும்பு”, "எறிந்தன்று”, “கொலைவிலார் கொண்டார் குறும்பு” என்ற வெண்பா மாலையினைக் காண்க. மாற்றானோடு போர் தொடுக்கும் மன்னவர்களின் முதல் நடவடிக்கையே வெட்சி எனும் புதுநிலை புகுந்தபோது, "ஊர் கொலை', பகையரசர்களின் பேரூர்ப் புறத்ததான ஆயர் பாடிகளின் அழிவைக் குறிக்கும் எனக் கொள்க. . . ஆனிரைக்கு அரண் தந்து நின்ற சிறு படையை அழித்துவிட்டு, வெட்சியார் ஆனிரையைக் கவர்ந்து சென்றனர் என்ற செய்தியை எஞ்சிய ஆயர் சிலர் தம் ஊர் அடைந்து உணர்த்துவதும், ஆண்டுள வீரர் பலரும் ஒன்று கூடி அவ்வானிரையை மீட்டுக் கொணர்வான் வேண்டி விரைவதும் நிகழும் ஆதலின், ஆனிரைகளைக் கவர்ந்து செல்லும் வெட்சியார் இடைவழியில் வந்தெதிர்க்கும் ஆயர்களாம் வீரரையும் வென்று ஒட்டிய பின்னரே, ஆனிரைகளைத் தம் ஊர்க்குக் கொண்டு செல்லுதல் இயலும், ஆகவே, நிரையோடு சிலர் செல்ல, சிலர் கரந்தையாரை எதிர்நோக்கிக் காட்டிடையே காத்திருப்பதும் உண்டு. "ஏறுடைப் பெருநிரை பெயர்தரப் பெயராது, இலை புதை பெருங்காட்டுத் தலைகரந்திருந்த