பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 61 வல்வில் மறவர் ஒடுக்கம் காணாய்” (புறம்:259) என்ற புறநானூற்றுச் செய்யுளைக் காண்க. அவ்வாறு காட்டின் இடைவழியில் கரந்திருந்த வெட்சிவீரர் வந்த கரந்தையார் மீது பாய்ந்து போரிட்டு, அவர்களை அறவே அழித்து வெற்றி கொள்வர். ஆகவே, அந்நிகழ்ச்சியைக் கூறும் "பூசல் மாற்று” எனும் துறையும், வெட்சித்திணைத் துறைகளுள் ஒன்றாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னர்க் கூறிய "ஊர் கொலை" நிகழ்ச்சி, ஆனிரை தங்கியிருந்த இடத்தில், அதைக் காவல் புரிந்திருந்தாரொடு செய்த போர்; "பூசல் மாற்று” இடைவழியில், கவர்ந்த ஆனிரையை மீட்க வந்த கரந்தை வீரரொடு ஆற்றிய போர். இவ்வேற்றுமை தோன்ற "ஆகோள்' நிகழ்ச்சிக்கு முன் நிகழ்ச்சியாக "ஊர்கொலை” யினையும், பின் நிகழ்ச்சியாகப் ‘பூசல் மாற்”றினையும் வைத்து, "ஊர் கொலை ஆகோள் பூசலமாற்றே" என முறை வகுத்து இலக்கணம் கூறியுள்ளார்கள், தொல்காப்பிய னாரும், ஐயன் ஆரிதனாரும். . . . கரந்தையாரை வென்று துரத்தி விட்டு, அவர் ஆனிரைகளைக் கைப்பற்றிக் கொண்டு காட்டு நெறியில் ஒட்டிச் செல்லும் வெட்சியார், அவ்வானிரைகளைத் தம்மூர்க்குக் கொண்டு சென்று தம்முள்ளே பங்கீடு செய்து கொள்ளும் வரையும் பொறுப்பார்ல்லர். அவர் வறுமைக் கொடுமை, அதுவரை பொறுத்திலது. அதனால் இடை வழியில், நிழல் நிறைமரம் ஒன்றின் கீழ்த்தங்கி, கைப்பற்றிக் கொணரும் ஆனிரையுள் கொழுத்த ஆவொன்றை வெட்டி வீழ்த்தி, அதன் ஊனை நெருப்பில் இட்டுப் புழுக்கி உண்டு செல்வராயினர்; ஆவைக் கொன்று தின்னும் ஆற்றவும் கொடிய அக்காட்சியைக் கண்டு கண்ணிர் வடித்துக் கலங்கியுள்ளார் கடைச் சங்கப் புலவர் ஒருவர். ஆனால்,