பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 63 கேடின்றிக் காக்க வேண்டுவது, மிக மிக இன்றியமையாத தாகி விட்டது. அந்நிலையில் போர் தொடுக்கும் தன் செயலைப் பகை நாட்டவர்க்கு முன்னதாகவே அறிவித்துப் போர் நிகழ்ச்சியால் அந்நாட்டுப்போர் வீரர் தவிர்த்துப் பிற உயிர் எதுவும் கேடுறல் பொறா அறத்தொடு பட்ட அருள் உள்ளம் உடைமையால், அந்தணர், அறவோர், பெண்டிர், பிணியாளர், மகப்பேறு பெறா மறவர் முதலாயினோரைத், தம் படைக்கலம் வந்து புகா அரண்தேடி அடைக என அறிவுறுத்தி விட்டு, அதைத் தாமே செய்து கொள்ள மாட்டா அந்நாட்டு ஆனிரைகளைத் தானே முனைந்து) காத்தற் பொருட்டே அவற்றைக் கவர்வன் ஆதலாலும், போர் ஒழிந்து இரு நாட்டவர்க்கு இடையேயும் நட்புறவு நிலவியதும், அவ்வானிரைகளை அவற்றின் உரியவர்.பால் ஒப்படைக்க வேண்டுவது முதற் பெரும் கடமையாம் ஆதலாலும், அவற்றையும் கேடுறாவாறு காக்க வேண்டுவது மிக மிக இன்றியமையாததாகி விட்டது. ஆகவே, கவர்ந்து காட்டு நெறியில் ஒட்டி வரும் போதே அவற்றின் நல் வாழ்வில் நாட்டங் கொள்வதைக் கூறும் "சுரத்து உய்த்தல்" என்ற துறை, அந்நிலையிலேயே தனி மிகப் பொருத்தம் உடையதாகி விட்டது. - - பாலை நிலத்து மறவர், ஆயர்தம் ஆனிரைகளைத் தம் வறுமையும் வயிற்றுப் பசியும் போக்கக் கவர்ந்து வந்ததே வெட்சித் திணைத் தோற்றத்தின் தலையாய காரணமாம் ஆதலின், அவ்வாறு வென்று கைக்கொண்ட ஆனிரைகளை, அம்மறவர் தம்முள்ளே பங்கிட்டுக்கோடலும், தம் வெற்றிப் புகழ் பாடும் பாணர் கூத்தர். முதலாயினோர்க்குக் கொடுத்தலும் அப்பூாலை நிலத்து மறவர்களின் பண்பாகி விட்டது. ஆகவே, அச்செயல்களைக் கூறும் "பாதிடும்."