பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஒ. புலவர் கா. கோவிந்தன் ஆகவே அத்தெய்வத்தை வழிபடுவோமாக என வழி பாடாற்றுவதும் சிற்றுார் மக்களிடையே இன்றும் காணலாம் சீரிய ஒழுக்கமாம். "மலைவான் கொள்கென உயர்பலி தூஉய் மாரியான்று மழைமேக்கு உயர்கெனக் கடவுள் பேணிய குறவர்மாக்கள்” (புறம்: 143) என அம்மக்கள் மாண்பின்ைப் படம் பிடித்துப் பாராட்டி யுள்ளார் பெரும்புலவர் கபிலர். இவ்வொழுக்கம் வெட்சி வீரரிடையேயும் விளங்கி நின்றது. வெட்சி வீரர், தம் தோள் ஆற்றலால் ஆண் ஆனிரை கொண்டாராயினும் நமக்கு அவ்வாற்றலும் ஆண்மையும் தருவாள் தங்கள் பாலை நிலத் தெய்வமாம் கொற்றவையே என்ற நம்பிக்கையுடையவ ராவர். அதனால், நிரைகோள் கருதிப் போவதற்கு முன்னர், அவள் அருள் வேண்டியும், வென்று நிரை கொண்டு வந்த பின்னர் அவள் அருள் நினைந்தும். விழாக் கொண்டாடி மகிழ்வர். ஆகவே அத்தெய்வ வழிபாட்டைக் கூறும் கொற்றவை நிலையும் வெட்சித் திணைத் துறைகளுள் ஒன்றாயிற்று. நிரைகோடல் ஒழுக்கம் உருப்பெற்ற காலத்தில், வெட்சியார், நிரைகளை, இரவில் எவரும் அறியாவாறு களவாடியே கவர்ந்து வந்தனராதலின், அக்காலத்தில் வெட்சியாரின் நிரைகவர் முயற்சியைப் பறைசாற்றும் "வெட்சி அரவம்" எனும் துறை இடம் பெற்றிருக்கவில்லை. அதைப் போலவே, அவர்கள் ஆனிரை கொண்டது தம் வயிற்றுப் பசியைப் போக்கிக் கொள்ளவேயாதலாலும், அதற்கேற்ப நிரையோடு வாழியிடம் வந்தடைவதற்கு முன்பே, இடைவழியில் விடைவீழ்த்தி உண்பதும் செய்தனர். ஆதலாலும், "நோயின்றி உய்த்தல்” எனும் துறையும் அக்காலத்தில் இடம் பெற்றிருப்பதும் இயலாது;