பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 இ. புலவர் கா. கோவிந்தன் இனிக் கரந்தையாவது, பாலை நிலத்து மறவர் களாகிய வெட்சியார் கவர்ந்து சென்ற ஆனிரைகளை முல்லை நிலத்து ஆயர்களாகிய கரந்தையார் மீட்டுக் கொணர்தலாம். அவ்வாறு மீட்டுவரச் செல்வார் கரந்தை சூடிச் செல்வராதலின், அவ்வொழுக்கம் கரந்தை எனப் பட்டது. கரந்தையாவது ஒரு பூண்டு எனச் சிலர் கூறுவர். திருநீற்றுப் பச்சையெனப்படுவது அதுவே என்பர் மற்றும் சிலர். துளசிக்கும் அது ஒரு பெயர் என்பர் வேறு சிலர். கரந்தை வயல்களில் விளைவது என்றும், நாகுமுலை போலும் வடிவினையும் நறிய பூக்களையும் உடையது என்றும் கூறுவர் பழந்தமிழ்ப் புலவர். "காய்த்த கரந்தை மாக்கொடி விளைவயல் (பதிற்று. 40), "நாகுமுலையன்ன நறும்பூங் கரந்தை" (புறம், 25 என்ற தொடர்களைக் காண்க. கரந்தை எனும் பெயரால் குறிப்பிடப்படுவது எதுவேயாயினும், அது பச்சை நிறம் உடையதென்பது உறுதி. நிறங்கள் பலவற்றுள்ளும் பச்சை நிறம், அன்பும் அருளும் குறிக்க வருவதாம். ஆகவே, அந்நிறம் வாய்ந்த கரந்தையினைச் சூடுவாரும், அன்பும், அருளும் நிறைந்த மனத்தினராதல் வேண்டும். கரந்தை வீரராவார், நிரை மீட்கும் வீரராவர். நிரை மீட்கும் ஒழுக்கம், நின்று தாக்கும் அரசர்க்கெல்லாம் ஏற்புடைய ஒழுக்கமாகக் கொள்ளப் பட்டுள்ளது. எனினும், அவ்வினையினைப் பண்டு மேற் கொண்டிருந்தவர் முல்லை நிலத்து ஆயர் மட்டுமேயாவர். அன்று ஆனிரை நம்பி வாழ்ந்தவர் அவ்வாயர் மட்டுமே யாவர். அத்தொழிலை இன்றுவரை மேற்கொண்டு வாழ்வாரும் அவ்வாயரே யாவர். ஆயர் என்ற இனத்தாரைக் குறிக்க இன்று வழங்கும் பட்டப் பெயராம் "பிள்ளை” என்பதே, நிரை மீட்கும் வீரராகிய