பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 இ. புலவர் கா. கோவிந்தன் பாடில்ல்ை” என, ஆசிரியர் இளங்கோவடிகளாரும் அவ்வாயர்தம் நலம் பாராட்டுவது காண்க. (சிலம்பு 15, 120–12) தகடுர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையால் கவர்ந்து செல்லப்பட்ட தன் நாட்டு ஆனிரையை, அவன் படைவீரர்க்குக் காளைகளோடும், கன்றுகளோடும் கூடிய கறவைகள் சிலவற்றை அளித்தே மீட்டுக்கொண்ட கழுவுள் என்பானை ஆன் பயம் வாழ்நர் கழுவுள்' என ஆயர் தலைவனாகவே கூறும் பதிற்றுப் பத்தும் (7), வேடர் கவர்ந்து சென்ற தன் ஆனிரையை நாடாளும் காவலனாம் கட்டியங்காரனால் மீட்டுத்தரல் இயலாது போனபோது அதை மீட்டுத் தருவானுக்குத் தன் மகளை மணம் செய்து தருவதாகப் பறைசாற்றி அவ்வாறே மீட்டுத்தந்த சீவகனுக்கு மகளை மணம் முடித்துத் தந்த நந்தகோனை ஆயர் தலைவனாகவே கூறும் சீவக சிந்தாமணியும் (கோவிந்தையார் இலம்பகம்) ஆனிரை மீட்கும் கரந்தை வீரர் முல்லை நிலத்து ஆயரே என்பதற்கு அரணாதல் 凸历s了6稣f凸历。 எண்ணித் தொடங்கும் போர் அன்று, கரந்தைப் போர். அது அவர்க்கு இன்றியமையாது வந்துற்ற போர். வீர்களில் விழைவு காரணமாக, போர் வெறிகாரணமாக வந்துற்றதன்று. ஒரு வினையின்பால் வேட்கையுற்று அதைத் குறைவற நிறைவேற்றிக் கொள்ளுதல் வேண்டும் என்று எண்ணுபவரே, அவ்வினையைத் தொடங்குவதன் முன்னர், அதைத் தொடங்கற்காம் வாய்ப்புடைய காலம், இடம் முதலியவற்றை எண்ணிப் பார்ப்பர். கரந்தைப் போரோ, அத்தகைய வேட்கை காரணமாக மேற் கொள்ளும் போர் அன்று. தம் ஆனிரைகளை வெட்சியார்