பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஆ. புலவர் கா. கோவிந்தன் இவ்வாறு தெளிவாகப் புலப்படுத்தியிருப்பதோடு, ஆனிரை கவர்வார் தொழில் கூறுங்கால், “படையியங்கு அரவத்தை" அடுத்து "விரிச்சி”, “வேய்' முதலாம் துறைகளைக் கூறியிருப்பது போல், ஆனிரை மீட்பார் தொழில் கூறுங்கால், “விரிச்சி", "வேய்" முதலாயினவற்றைக் கூறாமல் விட்டதோடு நில்லாமல் எடுத்த எடுப்பிலேயே "ஆரமர் ஒட்டலும்", "ஆபெயர்த்துத் தருதலும்" போல்வனவே கூறுவதையும் நோக்காது, "படை இயங்கு அரவம்" என்ற சூத்திரம் ஆனிரை கவர்வார், அது மீட்டார் ஆகிய இரு திறத்தவர் தொழில்களையும் ஒருங்கே குறிப்பதாகக் கொண்டு அதில் கூறும் ஒவ்வொரு துறையினையும் அவ்விரு திறத்தவர்க்கும் ஏற்றிக் கூறும் நச்சினார்க்கினியர் உரை போலி உரையேயல்லது, பொருளொடு பொருந்திய மெய்யுரை அன்று எனக் கொள்க. "படையியங்கு அரவம்" என்ற குத்திரம் ஆனிரைதரும் வெட்சியார், அது மீட்கும் கரந்தையார் ஆகிய இரு திறத்தவர் நிகழ்ச்சிகளையும் கூறவே வந்ததாயின், ஆனிரை மீட்கும் கரந்தையார் நிகழ்ச்சிகளைத் தனியே எடுத்துக் கூறும் “வெறியறி சிறப்பின்" என்ற குத்திரத்தைத் தருவதோ, அதில் கூறியது கூறல் எனும் குற்றம்பட "ஆரமர் ஒட்டல்", "ஆபெயர்த்துத் தருதல்” என்பன போலும் துறைகளையும் சேர்த்து வழங்குவதோ பொருந்தாது. ஆகவே, படை இயங்கு அரவம் என்ற சூத்திரம் நிரை கவரும் வெட்சியார் ஒழுக்கத்தை மட்டுமே உணர்த்துவதாகவும் "வெறியறி சிறப்பின்" என்ற சூத்திரமே நிரை மீட்கும் கரந்தையார் ஒழுக்கங்களை உணர்த்துவதாகவும் கோடலே பொருந்தும். உரையாசிரி யர்க்கும் அதுவே கருத்து என்பது, அச்சூத்திரத்தின் அவதாரிகையில், இனி அதற்கு மாறாகிய கரந்தைத்