பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 73 தினையாமாறு உணர்த்துதல் துதலிற்று. அதுவும் ஆநிரை மீட்டல் காரணமான அந்நிலத்தின்கண் நிகழ்வதாகலின் வெட்சிப் பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனாயிற்று” எனக் கூறுவதால் புலனாம். வெட்சியார் செயல்களைக் கூறுங்கால் வலியச் சென்று ஆனிரையைக் காத்து நின்றாரைக் கொன்று, அவருடைமையாம் ஆனிரையைக் கொள்ளை கொண்டு வந்தனர் என்பது பொருள்பட "ஊர் கொலை", "ஆகோள்' எனப் பெயரிட்டு அழைக்கும் ஆசிரியர், கரந்தையார் செயலைக் கூறுங்கால் வலியவந்த போரை வென்று ஒட்டிக் களவாடப்பட்ட நிரையை மீட்டுக் கொண்டு வருதல் என்பது பொருள்பட "ஆரமர் ஒட்டல்", "ஆபெயர்த்துத் தருதல்” எனும் பெயரிட்டு அழைக்கும் வேறுபட்ட நிலையாலும், “படைஇயங்கு அரவம்” என்ற சூத்திரம் வெட்சியார் செயல் குறிப்பதாக, “வெறியறி சிறப்பின்' என்ற சூத்திரம் கரந்தையார் செயல் குறிக்கும் என்பது உறுதியாகும். - பாலை நிலத்து மறவர், குறிஞ்சி நிலம் புகுந்து புல் மேய்ந்திருந்த தம் ஆனிரைகளைக் களவாடிக் கவர்ந்து செல்கின்றனர் என்ற செய்தி செவிப்பட்ட அந்நாழிகையே, முல்லை நிலத்து ஆயர் போர்க் கோலம் பூண்டு புறப்படுவதே இயற்கையோடு பட்டதாம் என்ற கருத்துடைமையால், நிரை மீட்கும் ஆயர் நிகழ்ச்சிகளைக் கரத்தை எனத் தனித்திணை வகுத்துக் கெள்ண்டு. விளக்கும் புறப் பொருள் வெண்பா மாலையாரும், "கரந்தையரவம்" என்ற துறையினை அடுத்து "அதரிடைச் செலவு”, “போர் மலைதல்" என்பன போலும் போர் நிகழ்ச்சிகளைக் கூறும் துறைகளை மட்டுமே வகுத்துக் கொண்டிருப்பதும் காண்க