பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 75 ராயினர். ஆகவே, மாயோன் வழிபாட்டைக்கூறும், "பூவை நிலையும்" கரந்தைத்திணைத்துறைகளுள் இடம் பெற்றது. மரத்தில் காய்க்கின்றன காயும் கனியும். மண் அளிக்கிறது கிழங்குகளை. காட்டில் தாமாகவே பிறந்து பெரியவை ஆகின்றன. விலங்குகள். ஆகவே, அவை, மக்கள் அனைவர்க்கும் உரிமையவாம். அவற்றைத் தன் ஒருவனின் தனியுடைமையாகக் கருதும் உரிமை ஒருவர்க்கும் இல்லை. அவ்வாறு வரைந்து கொள்ள வேண்டிய நிலையும் அக்கால மக்களுக்கு உண்டாகவில்லை. ஆகவே, தனியுடைமை கொண்டு எவரும் வாழ்ந்தாரல்லர். அதனால் களவு கவர்தல் என்ற பொல்லாங்குகட்கு இடம் இல்லாமல் இருந்தது. மக்களினம், குறிஞ்சி நிலவாழ்வினராம் நிலை பெற்றிருந்த காலத்திய வாழ்வியல் முறை இது. ஆனால், அப்பொதுவுடைமை நிலை நெடிதுநாள் நிலைத்திருக்க வில்லை. மக்கள் குடிபெயர்ந்ததும், உடைமை நிலையிலும் மாறுதல் இடம்பெற்று விட்டது. முல்லை நிலம் புகுந்து, ஆயர் எனும் புதிய இனப் பெயர் உடையவராகி, ஆட்டையும் மாட்டையும் வளர்க்கத் தலைப்பட்டதும், மனித உள்ளமும் மாறுபடத் தலைப்பட்டது. புல்லும் புனலும் அளித்தும், பொல்லா விலங்குகளிடமிருந்து காத்தும் தான் வளர்ப்பதால் வளர்கின்றன. ஆடுகளும் மாடுகளும். ஆகவே, அவை, தன் உடைமைகளாம் என்று எண்ணத் தொடங்கினான் மனிதன். இவ்வாறு, தனியுடைமை நிலை உருப்பெறவே, அவ்வுடைமையைப் பெறமாட்டாதான், அதைக் களவாடியோ கொள்ளை யடித்தோ தனக்கு உடைமையாக்கிக் கொள்ளும் நிலையும் உடன் தோன்றலாயிற்று. அதனால் உடைமை பெற்றவர், தன் உடைமை ஒன்று பலவாகப் பெருக்குவதோடு