பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 79 ஒருவனும் உளனாதல் காண்க. இவ்வாறு ஆனிரை மீட்புப் போரில் அரசர் பங்குபெறும் காலம் வந்துற்றதும், அவ்வாறு வந்து துணை புரியும் அரசரைப் புகழ்வதும், அவர்தம் அடையாளப் பூக்களைப் புகழ்வதும் இயல்பாகவே, "போந்தை", "வேம்பு", "ஆர்" என்ற துறைகளும் கரந்தைத் திணைக்கண் இடம் பெறலாயின. "நிரைகோள் கேட்டவழி நெடுநிலை வேந்தரும் கதும் என எழுவாராதலின் நிரை மீட்டலின் கண் பூப் புகழப்பட்டது” என்ற உரையாசிரியர் கூற்றினையும் நோக்குக. . அரசர்கள் பண்டு மேற்கொண்ட முதற்போர் ஆனிரை மீட்கும் கரந்தைப் போரே யாதலின், அவர் வென்ற துறைகளை, ஆசிரியர் தொல்காப்பியனார், கரந்தைத் திணைக்கண் அடக்கினாராக, பிற்காலத்தில் அவர்கள் மேற்கொண்ட போர் மண் ஆசை, பெண் ஆசை, புகழ் ஆசை எனப் பல்வேறு காரணம் குறித்தும் நிற்கவே, ஆனிரை மீட்பு ஒன்றை ഥL@മേ கொண்டு புகழ்வது கைவிடப்பட்டு, அவர்தம் பல்நிலை வெற்றிகளையும் விளங்கப் பாடும் வழக்கம் வந்துற்றமையால், பு.வெ. மாலையார், "போந்தை", "வேம்பு' 'ஆர்' என்ற அத்துறைகளைப் பொதுவியலின் கண் அடக்கினார். மகளிராயின், அவர் கற்பினைக் காத்தற் பொருட்டும், ஆடவராயின் அவர் ஆண்மையினைக் காத்தற் பொருட் டும் காலணி சூட்டுவது, தமிழகத்தின் தொல்பெரும் "தண்டாரணியத்துக் கோட்பட்ட வருடையைத் தொண்டியுள் தந்து கொடுப்பித்து” -பதிற்றுப்பத்து 6-ஆம் பத்துப்பதிகம்