பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 இல் புலவர் கா. கோவிந்தன் வழக்கமாம். அக்காலணிகளும் மகளிர் புனையும் காலணி சிலம்பு எனப்படுமாயின், ஆடவர் புனையும் காலணி கழல் எனப்படும். வென்று பணி கொண்ட வேந்தர்களின் முடிப் பொன்னால் கழல் பண்ணி அணிவதில் பெருமை கண்டார்கள் பழந்தமிழ் அரசர்கள். "அவர் முடிபுனைந்த பசும் பொன்னின் அடிபொலியக் கழல் தைஇய வல்லாளனை" (புறம்: 40) என்ற தொடர்களைக் காண்க தத்தம் ஆண்மையைப் புலப்படுத்தும் அணியாகக் கழல் புனைவது வீரர் அனைவர்க்கும் பொதுவியல்பாம் எனினும், அறத்தொடுபட்ட முதல் நற்போர் ஆனிரை மீட்சிப் போரே யாதலின், "கழல்நிலைத் துறையை வெட்சியாரொடுபடுத்தோ, வேறு காஞ்சி, நொச்சி,தும்பை வீரர்களோடு படுத்தோ கூறாமல், ஆயர் அறப்போர் நிகழ்ச்சிகளிடையே வைத்து விதி வகுத்துள்ளார், ஆசிரியர் தொல்காப்பியனார். ஆனால், பிற்காலத்தில் அறம் குறித்து எழும் போர் ஆனிரை மீட்சிப் போர் ஒன்றே என்ற நிலைகெட்டு, அகநாடு காக்கவும், அரனழிவு போக்கவும், ஆண்மை பழிக்கப் பெறுவதை அகற்றவும் மேற்கொண்ட போர்களும் அறத்தொடுபட்ட போர்களே என்ற நிலை பிறக்கவே, பு.வெ. மாலையார் கழல் நிலையைப் பொதுவியல் திணைக்கண் வைத்து விதி வகுத்துள்ளார். பெரும் பெரும் காடுகளுக்கு இடையிடையே இடம் பெற்றிருந்த சிறியவும் பெரியவுமாய ஊர்களின் கூட்டமே, பண்டு நாடு எனப்பட்டது. ஆதலின் ஒரு நாட்டைக் கைப்பற்றக் கருதும் அரசன், போரின் முதல் நிகழ்ச்சியாக, அந்நாட்டைச் சூழ உள்ள காடுகளை அழிப்பதும், அதுபோலவே, தன் நர்ட்டைப் பகைப்பயம் இலதாகக் காக்க விரும்பும் அரசன், அந்நாட்டைச் சூழ உள்ள காடு