பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 இ. புலவர் கா. கோவிந்தன் கொள்ளத் தக்க இழிநிலை பெற்று விட்டது. ஆசிரியர் தொல்காப்பியனார் உன்னத்தின் தொன்னிலையையே கருத்துட் கொண்டதால், காட்டகத்து நிகழ்ச்சிகளைக் கூறும் கரந்தைக்கண் அதை அடக்கினார். பு:வெ.மாலையார், அதை நிமித்தம் கூறுவதாகவே கொண்டமையால் பொதுவியலின் கண் அடக்கினார். பகைவர், தம் ஆனிரையினைக் கொண்டக்கால், அந்நாட்டு ஆயர், அந்நாட்டு அரசனிடம் சென்று முறையிட, அரசன் விரைந்து சென்று, அப்பகை நாட்டு வீரர்களாம் வெட்சியாரை வென்று ஆனிரையை மீட்டுத் தருவன். இவ்வாறு ஆனிரை மீட்புப் போரில் அரசர் பங்கு பெறும் காலம் வரவே, அவ்வாறு துணை புரியும் அரசர்களின் அடையாள மலர்களைப் புகலுவதோடு, அவ்வரசர்களைப் புகழ்வதும், அவ்வரசர் தம் படை வீரர்கள், தம்மை அவ்வானிரை மீட்புப் போருக்குப் போக்குவான் வேண்டித் தத்தம் பெருமை பேராண்மை களை அவ்வரசர் முன் எடுத்துச் சொல்லிப் பெருமை கொள்ளுதலும் ஆகிய நிகழ்ச்சிகளும் கரந்தை நிகழ்ச்சிக் கண் இடம் பெறலாயின; ஆகவே, "சீர்சால் வேந்தன்” சிறப்பு எடுத்து உரைத்தலும், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும் கரந்தைத் திணைத் துறை களாயின என்கிறார் ஆசிரியர் தொல்காப்பியனார்; இவற்றிற்கு, முறையே, "வேத்தியல் மலிவு", "நெடுமொழி கூறல்” எனும் பெயர்கள் சூட்டியுள்ளார் பு.வெ. மாலையார். அவ்வாறு நெடுமொழி கூறிக் களம் புகுந்த கரந்தை வீரர்களுள் சிலர், போரில் புண்பட்டு உயிரிழந்து போக, எஞ்சியோர் புண் பெற்றும், பெறாதும் புறங்காட்டிப்