பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 83 போந்து விடாது, வந்த பகைவர் படையை வென்று துரத்திவிட்டு, வெற்றிப் புகழோடு வீடு திரும்புவதும் நிகழவே, அவற்றைக் கூறும் "வாள்வாய்த்துக் கவிழ்தல்”, "வருதார் தாங்கல்” என்ற துறைகளும் கரந்தைத் திணைக்கண் இடம் பெற்றன; “வாள் வாய்த்துக் கவிழ்தலை"ப் போர்க்களத்து ஒழிதல்” என ஒரு துறையாகக் கொண்ட பு. வெ. மாலையார், "வருதார் தாங்கும்” நிகழ்ச்சியை நான்கு வகையாக விரித்து, வந்த படையைத் தனித்து நின்று தாங்கிய தறுகண்மையினை யுடையானுக்கு ஆள் எறிபிள்ளை எனும் பெயர் சூட்டிப் பாராட்டும் "ஆள் எறி பிள்ளை” வெற்றி கொண்ட அவ்வீரன் தன் வேற்படைக்கு வீழ்ந்த பகைவர் தம் குடரை மாலையாகச் சூட்டி மகிழ்ந்தாடும் வெற்றித் திருக்கூத்தைக் கூறும் பிள்ளை சூட்டு', வீரப் புண்ணோடு வீடு திரும்பும் வீரன் செயல் கூறும் "புண்ணோடு வருதல்", வீரப் புண் பெற்றேன் என்ற பெருமித வுணர்வால் அவ்வீரன் ஆடும் வெற்றித் திருக்கூத்தைக் கூறும் "பிள்ளைத் தெளிவு" என நால்வேறு பெயர் சூட்டி விளக்கியுள்ளார். இத்துறைகளெல்லாம், கரந்தை வீரர் கன்று கறவைகளோடு கூடிய ஆனிரையினை மீட்டுத்தந்து, தம் நாட்டிற்குச் செய்த கடமைகளைக் கூறும் துறைகளாம். இனி, இவ்வாறு பணியாற்றிய அப்பெரு வீரர்களுக்கு அந்நாட்டு மக்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவராவர். போர்க்களம் புகுந்தாருள் சிலர் போராடி இறந்தனர்; வெற்றியோடு வீடு திரும்பினாருள் சிலர் புண்ணோடு திரும்பினர்; சிலர் புண்தானும் பெறாதே திரும்பினர் என அறிந்த அந்நாட்டவர், புண் பெறாது மீண்டவனே போர் வன்மை வாய்க்கப் பெற்றவனாவன்; ஆகவே, தம்மையும்