பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 85 நிகழ்ச்சியைக் கூறுவதால், மக்களுள் ஒருவனை மன்னவ னாக்கும் நிகழ்ச்சியைக் கூறாது, அவ்வாறு வெற்றி கொண்டு வந்த வீரனுக்கு மன்னவன் செய்யும் சிறப்பினைக் கூறத்தொடங்கி, "பிள்ளைப் பெயர்ச்சி” என்றதுறையினைக் கொண்டு, "போர்தாங்கிப் புள் விலங்கியோனைத் தார் வேந்தன் தலையளித்தன்று” என அதற்கு விளக்கமும் தந்துள்ளார். つ களம் நோக்கிச் சென்று வென்று மீண்டாருள் விழுமியோன் ஒருவனுக்கு அரச வாழ்வு அளித்துச் சிறப்பித்த நாட்டு மக்கள், அப்போரில் வீழ்ந்து மடிந்தாரை யும் பாராட்டக் கடமைப் பட்டவராவர். அவர்க்கு அவர் செய்த பாராட்டே கல்நாட்டுதல். ஆகவே, அந்நிகழ்ச்சியின் பல்வேறு பகுதிகளையும் விளக்கும் "காட்சி," "கல்கோள்", "நீர்ப்படை', 'நடுகல்" "பெரும்படை”, “வாழ்த்து முதலாம் துறைகள் கரந்தைத் திணையின் இறுதிக்கண் நிற்கும் துறைகளாயின. கல்நாட்டு விழா, போரில் வீழ்ந்த வீரர்களுக்கு மட்டுமேயல்லாமல், கற்புடைய மகளிர் போலும் பிறர்க்கும் செய்யும் சிறப்பாகப் பிற்காலத்தில் கொள்ளப்பட்டன வேனும், அது, கரந்தை வீரர்க்குச் செய்யும் சிறப்பாக மட்டுமே பண்டு கொள்ளப்பட்டது. "நாகு முலையன்ன நறும்பூங்கரந்தை விரகறியாளர் மரபிற் சூட்ட நிரை இவண் தந்து நடுகல் ஆகிய வென்வேல் விடலை" (புறம், 26), "பல்ஆன் கோவலர் படலை சூட்டக் கல் ஆயினையே, கடுமான் தோன்றல்!” (புறம்: 265), “பல் ஆபெயர்த்து நல்வழிப் படந்தோன் கல்”, “அன்று கொள் ஆ பெயர்த்து ஆரமரில் வீழ்ந்தோன் கல்” என வரும் தொடர்கள், ஆனிரை மீட்சிப் போரில் வீழ்ந்தானுக்கே கல் நாட்டுவர்; நடுகற்களுக்கு வழிபாடு செய்வார் ஆயரே என்ற