பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 ↔ புலவர் கா. கோவிந்தன் உண்மைகட்கு உறுதுணையாதல் காண்க. ஆகவே, கல் நாட்டு விழா கரந்தை வீரர்க்கே உரித்தாதல் உணர்ந்த ஆசிரியர் தொல்காப்பியனார், அத்தொடர்புடைய துறைகளை, "ஆரமர் ஒட்டல்”, “ஆ பெயர்த்துத் தருதல்" போலும் கரந்தை வீரர் செயல்களைத் தொகுத்துக் கூறும் சூத்திரத்தின்கண் கொண்டாராக. அந்நிகழ்ச்சி, வேறு நிலைகளால் விழுமியோராகி விண்ணுலகு புகுந்தார்க்கும் உரிமையாக்கப் பெற்ற பிற்கால நிலையினையே கருத்தில் கொண்ட பு.வெ. மாலையார் "கையறு நிலை” எனப் பொதுவான துறை ஒன்றை மட்டும் ஈண்டுகொண்டு, கல் நாட்டு விழாக் குறித்த துறைகளைப் பொதுவியலின்கண் அடக்கியுள்ளார். -, * ஆக, இதுகாறும் கூறியவற்றான், பாலைநிலத்து மறவர், தமக்குப் பொருட் குறைபாடு நேருந்தோறும், முல்லை நிலத்து ஆயர்களின் ஆனிரைகளைக் கைப்பற்றிச் செல்லதே வெட்சி என்பதும், ஆனிரைக்ளே தம் உடைமையாம் எனக் கொண்டு வாழ்ந்த முல்லை நிலத்து ஆயர், அம்மறவர் பின் சென்று, அவரை வென்று, அவ்வானிரைகளை மீட்டுக் கொணர்தலே கரந்தை என்பதும், நிரை கோடலையும், நிரை மீட்டலையும் பண்டு மேற்கொண்டிருந்தவர் முறையே, பாலைநிலத்து மறவரும், முல்லை நிலத்து ஆயருமே ஆவர் என்பதும், ஆக, நிரை கோடலும், நிரை மீட்டலும் குறித்து எழும்போர் பாலை நிலத்தார்க்கும், முல்லை நிலத்தார்க்கும் இடையே நிகழ்ந்த போர் ஆகும் என்பதும் முடிபாயின. "கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன வல்வில் எயினர் மன்று பாழ்பட்டன" -சிலம்பு 12, 12-13