பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி தோற்றுவாய் போர் விரும்பத்தகாத ஒன்று; வேண்டாததும் கூட என்றாலும், போர் நிகழாத நாடு உண்டா? இல்லை. அது நிகழாத காலத்தைக் காண முடியுமா? இயலாது. போர் புரியாத உயிரினம் எதுவேனும் உண்டா? இல்லை. பனி தவழும் உலகின் கோடியிலும் போர்; இருள் தவழும் பெருங்காட்டு நிலமாம் உலகின் இடைப் பகுதியிலும் போர்; உலகம் தோன்றிய நாள் தொட்டுப் போர் தொடர்ந்தே வருகிறது. காட்டுக் கொடு விலங்கினங்களும் போர் புரிகின்றன; நாட்டில் வாழும் நாகரிக நெறி கற்ற மக்கள் இனமும் போர் புரிகின்றன. இன்று நாம் காணும் இவ்வுலகமே மக்கள் இனம் மற்ற இயற்கைகளோடு ஓயாது நடத்திய போராட்டத்தின் உறு பயன் ஆகும். - காய் கனி தின்று, காட்டாற்று நீர் குடித்து வாழ்ந்த மக்கள் இனம், சுவை ஆறே என்றாலும், ஆயிரம் ஆயிரம் வகையாக ஆக்கி உண்ணுகிறது இன்று. அதற்கு, அது மேற்கொண்ட போராட்டம் எத்தனை எத்தனையோ! மலையிலும், மலைக் குகையிலும், மரங்களின் செறிவிலும் மறைந்து வாழ்ந்த மக்களினம், பனியின்