பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி இ. 91 பசித்த பாலை நிலத்து மறவர், தம் பசி போக, ஆயர் ஆனிரையைக் கவர்ந்து கொள்ள, அதை ஆயர் மீட்டு வந்தனர் என்ற நிலை நிலவிய போது, இரு திறத்தவர் தொழில்களில் நிரைமீட்கும் ஆயர் தொழிலே சிறப்புடைய தாகவே, வெட்சியாவது, ஆ தந்து (மீட்டுத் தந்து) ஒம்பலாக இருந்தது. அந்நிலைமாறி வேந்தர் தம் போர் நிகழ்ச்சியின் முதல் நடவடிக்கையாகப் பகைநாட்டு ஆனிரைகளைக் காத்தற் பொருட்டு அதைக் கைப்பற்ற, அப்பகையரசர் அதை மீட்டல் என்ற நிலை வந்துற்ற பின்னர், ஓம்பல் கருதி நிரை கவரும் வேந்தர் தொழிலே விழுமியதாகப்படவே, வெட்சியாவது நிரைகவர்தலாக மாறிவிட்டது. இவ்வாறு வெட்சி நிரை கவர்தலுக்கு மட்டுமே பெயராகி விடவே, நிரைமீட்கும் தொழிலைத் தனித்திணையாக்கி, அதற்குச் சூட்டத் தக்க புதுப் பெயர் தேடி அலைந்த ஆசிரியர்கள், நிரைமீட்போர் நிகழ்ச்சிகளைக் கூறும் “வெறியறி சிறப்பின்" என்ற தொல்காப்பியச் சூத்திரத்தில் கரந்தை எனும் பெயர் வரக்கண்டு அதையே அதற்குப் பெயராகச் சூட்டி விட்டனர் போலும். ஆனிரைக்கு உரிய ஆயர் முல்லை நிலத்தவராவர். அவ்வானிரையைக் களவாடிக் கவர்ந்து செல்லும் மறவர் பாலை நிலத்தவராவர். அவ்வாறாகவும், நிரை கோடலும், நிரை மீட்டலும் ஆகிய இரு நிகழ்ச்சிகளையும் வெட்சி எனவும், கரந்தை எனவும் பெயரிட்டு ஓரிடத்து நிகழ்ச்சி களாக ஒன்றுபடுத்திக்கூறும் ஆசிரியர் தொல்காப்பியனார், அவ்வொழுக்கம் அவ்விருவர்க்கும் உரியதல்லாத குறிஞ்சி நிலத்தின் புற ஒழுக்கமாம் என்று கூறுகிறார்."வெட்சிதானே குறிஞ்சியது புறனே." (தொல், புறம். ) தொல்காப்பியத்திற்கு உரை வகுத்த ஆசிரியர்களுள் நச்சினார்க்கினியர், “களவொழுக்கமும் கங்குற் காலமும்