பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 இ. புலவர் கா. கோவிந்தன் காதலர் கடுகினும் தான் கருதிய பொருளை இரவின் கண் முடித்து மீடலும் போல்வன. ஒத்தலின், வெட்சி குறிஞ்சிக்குப் புறன் ஆயிற்று” என்று காரணம் காட்டி யுள்ளார். உரையாசிரியர் எனச் சிறப்பிக்கப் பெறுவோ ராகிய இளம்பூரணர், "வெட்சி, குறிஞ்சிக்குப் புறனாயது. எவ்வாறு எனின், நிரைகோடல் குறிஞ்சிக்கு உரிய மலை சார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின், பிறநாட்டு ஆன் நிரையைக் களவிற்கோடல் ஒருபுடை குறிஞ்சிக் குரித்தாகிய களவோடு ஒத்தலானும், அதற்கு அது புறனாயிற்று என்க,” எனக் காரணம் காட்டியுள்ளார். வெட்சியாவது நிரை கவர்தல் என்று கொண்டமையால், நச்சினார்க்கினியர் அவ்வாறு கூறினார். உரையாசிரியர்க்கும் அதுவே கருத்து ஆதலின், நிரை கோடல் குறிஞ்சிக்குரிய மலை சார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும் என்ற நேரிய காரணத்திற்கு மேலும் களவுத்தன்மையாம் ஒருமைப்பாட்டினையும் காரணம் காட்டியுள்ளார். ஆசிரியர் தொல்காப்பியனார், தொடக்க நிலை வெட்சியினையே விளக்க முன் வந்தவராவர். ஆகவே, வெட்சி ஒழுக்கம் பற்றிய அவர் கருத்து வெட்சியாவது நிரை கவர்தல் ஒழுக்கத்தை மட்டும் உணர்த்துவதன்று; கவரப்பட்ட நிரையை மீட்டுத் தரும் ஒழுக்கத்தை உணர்த்துவதாகும் என்பதே. ஆகவே "வேந்து விடு முனைஞர் வேற்றுப் புலக்களவின் ஆதந்து ஓம்பல்.மேவற்று ஆகும்” என்ற சூத்திரத்திற்கு. "வேந்தனால் விடப்பட்ட முனை, ஊரகத்து உள்ளார், வேற்று நாட்டின்கண் களவினானே ஆவைக் கொண்டு, பெயர்ந்து பாதுகாக்கும் மேவலை உடைத்த’ என உரையாசிரியரும் வேந்தனால் விடப்பட்டு முனைப்புலம் காத்திருந்த தண்டத் தலைவர்