பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 இல் புலவர் கா. கோவிந்தன் களவாடிக் கொள்வான் செல்லும் பாலை நிலத்து மறவர், அக்குறிஞ்சி நிலத்துப் புகுந்தே, அவ்வானிரைகளைக் களவாடிக் கைப்பற்றுவர். அதை விடுத்து ஆயர் வாழும் ஊருட் புகுந்து ஆனிரைகளைக் கைக்கோடல் பாலை நிலத்து எயினர்க்கு இயலாது. ஆயர் பாடி புகும் ஆனிரை. ஒருங்கு கூடி இரா, உரியார் வீடுதோறும் புகுந்து அடங்கிவிடும். மேலும், ஆண்டு ஊர்க்காவலும் அதிகமாம். அவ்வாறே, எயினர் ஊர் புகும் ஆனிரைகளும் ஒருங்கு கூடி நில்லா. அவற்றை அவ்வெயினர் தமக்குள்ளே பகுத்துக் கொண்டு விடுவர். மேலும், ஆண்டு அவர் ஆற்றலும் அதிகமாம். ஆகவே, தம் ஆனிரைகளை மீட்கத் துணியும் ஆயர்களும், ஆனிரைகளோடு பாலை நிலத்து மறவர், குறிஞ்சி நிலத்தைக் கடந்து விடா முன்னரே, போரிட்டு மீட்க முன் வருவர். ஆகவே, நிரை கோடலும், அந்நிரையினை மீட்டலும் ஆகிய இரு நிகழ்ச்சிகளும், அவ்விருவர்க்கும் உரிய நிலமல்லாத குறிஞ்சி நிலத்திலேயே நிகழும். "நிரை கோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும்” என்ற உரையாசிரியரின் தலையாய காரணத்தையும் காண்க. ஆகவே, "வெட்சி தானே குறிஞ்சியது புறனே' என்றார் ஆசிரியர் எனக் கொள்க. - வெட்சி வீரராவர் பாலை நிலத்து மறவராவர். பாலை எனப் பெயருடையதொரு தனி நிலம் இல்லை. குறிஞ்சி நிலமே கோடையின் கொடுமையாலும், மழை பெறா வறுமையாலும், வளமும் வனப்பும் இழந்து, வேனிற் காலத்தில் பாலை எனும் பெயருடையதாகிவிடும். (சிலம்பு: 11:52-67). ஆகவே, வாழும் வகையற்றுப் போகும் குறிஞ்சி நிலத்து மக்களே,-அவ்வேனிற் காலத்தில், பாலை நிலத்து மறவர் என்னும் பெயருடையராகிவிடுவர். கோடையின்