பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழர் போர் நெறி 95 கொடுமை, குறவனை மறவனாக மாற்றிற்று. வளமார் காலத்தில் வேட்டையாடி வாழ்ந்தவன், வறுமைக் காலத்தில், ஆறலைத்தும், ஆனிரை கவர்ந்தும் வாழத் தலைப்பட்டான். ஆக, வெட்சியான் செயலாகக் கூறப் படுவன எல்லாம், கோடைகாலத்துக் குறிஞ்சி நிலத்தான் செயலேயாதலின், வெட்சியைக் குறிஞ்சிப் புறன் என்று கொண்டார் எனக் கூறுவதும் பொருந்தும். புணர்தல் குறிஞ்சி நிலத்தின் அகவொழுக்கம் எனப் பெயர் பெற்றது. அதுபோல், வெட்சி குறிஞ்சி நிலத்தின் புறவொழுக்கமாம். வெட்சியாவது, களவாடப்பட்ட ஆனிரைகளை மீட்டுக் கொண்டு வந்து, அவற்றின் கன்று களோடு ஒன்றுபடுத்துதல். ஆகவே, அன்பால் ஒன்று பட்டிருக்கும் உயிர்கள், பிரிக்கப்பட்ட நிலையினைக் கெடுத்து ஒன்றுபடுத்தும் வெட்சி ஒழுக்கம், குறிஞ்சியின் புறன் ஆயிற்று என்ற காரணமும் ஒரு வகையில் ஏற்புடையதே ஆகும். - - வெட்சித் திணைச் சூத்திரங்கள் "அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின், வெட்சிதானே குறிஞ்சியது புறனே, உட்குவரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே." "வேந்து விடு முனைஞர் வேற்றுப்புலக் களவின் ஆதந்து ஓம்பல் மேவற்று ஆகும்." "படை இயங்கு அரவம், பாக்கத்து விரிச்சி, புடைகெடப் போகியசெலவே, புடைகெட ஒற்றின் ஆகிய வேயே வேய்ப்புறம் முற்றின் ஆகிய புறத்துஇறை, முற்றிய ஊர்கொலை, ஆகோள் பூசல்மாற்றே,